த – Tamil Devotional Song Lyrics

தலைகள் உயரட்டும்
தலைகள் உயரட்டும் கதவு திறக்கட்டும்

இராஜா வருகிறார்-இயேசு

யார் இந்த ராஜா…. மகிமையின் ராஜா

1. வாசல்களே தலைகளை உயர்த்துங்கள்

கதவுகளே திறந்து வழிவிடுங்கள்

படைகளின் ஆண்டவர் பராக்கிரமம் நிறைந்தவர்

உள்ளே நுழையட்டும்

2. மண்ணுலகம் கர்த்தருக்கு சொந்தமன்றோ

அதன் குடிகள் எல்லாம்

அவரின் உடமை அன்றோ

தேடுவோம் அவரை நாடுவோம் தினமும்

இரட்சகர் இயேசுவை

3. கர்த்தர் மலைமேல் ஏறத்தகுந்தவன் யார்?

அவர் சமூகத்திலே நிற்கத்தகுந்தவன் யார்?

சுத்தமான கைகள் தூய்மையான இதயம்

உடையவன் தானே

4. கர்த்தர் சமூகம் தேடும் சமுதாயம் நாம்

அவராலே ஆசீர் பெற்ற சபை நாம்

நீதிமான்கள் என்று கர்த்தர் தாமே நமக்கு

தீர்ப்பு கூறிவிட்டார்

தகப்பனே தந்தையே
தகப்பனே தந்தையே

தலைநிமிரச் செய்பவர் நீரே

கேடகம் நீரே மகிமையும் நீரே

தலை நிமிரச் செய்பவர் நீரே

1. எதிரிகள் எவ்வளவாய் பெருகிவிட்டனர்

எதிர்த்தெழுவோர் எத்தனை

மிகுந்து விட்டனர்

ஆனாலும் சோர்ந்து போவதில்லை

தளர்ந்து விடுவதில்லை

தகப்பன் நீர் தாங்குகிறீர்

என்னைத் தள்ளாட விடமாட்டீர்

2. படுத்துறங்கி மகிழ்வுடனே

விழித்தெழுவேன்

ஏனெனில் கர்த்தர்

என்னை ஆதரிக்கின்றீர்

அச்சமில்லையே கலக்கமில்லையே

வெற்றி தரும் கர்த்தர் என்னோடு

தோல்வி என்றும் எனக்கில்லையே

3. ஒன்றுக்கும் நான் கலங்காமல்

ஸ்தோத்தரிப்பேன்

அறிவுக்கெட்டா பேர் அமைதி

பாதுகாக்குதே

நீர் விரும்பத்தக்கவை,தூய்மையானவை

அவைகளையே தியானம் செய்கின்றேன்

தினம் அறிக்கை செய்து ஜெயம் எடுப்பேன்

தடுக்கி விழுந்தோரை
தடுக்கி விழுந்தோரை தாங்குகிறீர்

தாழ்த்தப்பட்டோரை தூக்குகிறீர்

தகப்பனே தந்தையே

உமக்குத்தான் ஆராதனை

1. போற்றுதலுக்குரிய பெரியவரே

தூயவர் தூயவரே

எல்லாருக்கும் நன்மை செய்பவரே

இரக்கம் மிகுந்தவரே

உம்நாமம் உயரணுமே

அது உலகெங்கும் பரவணுமே

2. உம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும்

அருகில் இருக்கின்றீர்

கூப்பிடுதல் கேட்டு, குறை நீக்குவீர்

விருப்பம் நிறைவேற்றுவீர்

3. உயிரினங்கள் எல்லாம் உம்மைத்தானே

நோக்கிப் பார்க்கின்றன

ஏற்றவேளையில் உணவளித்து

ஏக்கமெல்லாம் நிறைவேற்றுவீர்

4. அன்பு கூறும் எங்களை அரவணைத்து

அதிசயம் செய்கின்றீர்

பற்றிக்கொண்ட யாவரையும் பாதுகாத்து

பரலோகம் கூட்டிச் செல்வீர்

தண்ணீர்கள் கடக்கும் போது
தண்ணீர்கள் கடக்கும் போது

என்னோடு இருக்கின்றீர்

அக்கினியில் நடக்கும் போது கூடவே வருகின்றீர்

மூழ்கிப் போவதில்லை

எரிந்து போவதில்லை

1. என் மேல் அன்பு கூர்ந்து

எனக்காய் இரத்தம் சிந்தி

என் பாவம் கழுவி விட்டீரே

எனக்கு விடுதலை தந்து விட்டீரே

நன்றி ஐயா, நன்றி ஐயா

2. உமது பார்வையிலே

விலையேறப் பெற்றவன் நான்

மதிப்பிற்கு உரியவன் நானே – இன்று

மகிழ்வுடன் நடனமாடுவேன்

3. பாலைவன வாழ்க்கையிலே

பாதைகள் காணச் செய்தீர்

ஆறுகள் ஓடச் செய்தீரே – தினம்

பாடி மகி ழச் செய்தீரே

4. பெற்ற தாய் தனது

பிள்ளையை மறந்தாலும்

நீர் என்னை மறப்பதில்லையே – உமது

உள்ளங்கையில் பொறித்து வைத்துள்ளீர்

5. என்னைப் படைத்தவரே

உருவாக்கி மகிழ்ந்தவரே

பெயர் சொல்லி அழைத்துக் கொண்டீரே

உமக்கு உரிமையாக்கிக் கொண்டீரே

தளர்ந்து போன கைகளை
தளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள்

தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள்

1. உறுதியற்ற உள்ளங்களே திடன் கொள்ளுங்கள் அஞ்சாதிருங்கள்

அநீதிக்குப் பழி வாங்கும் தெய்வம் வருகிறார்

விரைவில் வந்து உங்களையே விடுவிப்பார்

அஞ்சாதிருங்கள் திடன் கொள்ளுங்கள்

ராஜா வருகிறார் இயேசு ராஜா வருகிறார்

2. அங்கே ஒரு நெடுஞ்சாலை வழியிருக்கும்

அது தூய வழி

தீட்டுப்பட்டோர் அதன் வழியாய்

கடந்து செல்வதில்லை

மீட்கப்பட்டோர் அதன் வழியாய்

நடந்து செல்வார்கள்

3. ஆண்டவரால் மீட்கப்பட்டோர்

மகிழ்ந்து பாடி சீயோன் வருவார்கள்

நித்திய மகிழ்ச்சி தலை மேலிருக்கும்

சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போகும்

4. பார்வையற்றோர் கண்களெல்லாம்

பார்வை அடையும் செவிகள் கேட்கும்

ஊனமுற்றோர் மான்கள் போல

துள்ளிக் குதிப்பார்கள்

ஊமையர்கள் பாடிப் பாடி மகிழ்ந்திருப்பார்கள்