Volume -22 – Tamil Devotional Song Lyrics

கண்களை பதிய வைப்போம்
கண்களை பதிய வைப்போம்

கர்த்தராம் இயேசுவின் மேல்

கடந்ததை மறந்திடுவோம்

தொடர்ந்து முன் செல்லுவோம்

1. சூழ்ந்து நிற்கும் சுமைகள்

நெருங்கி பற்றும் பாவங்கள்

உதறித் தள்ளிவிட்டு

ஓடுவோம் உறுதியுடன்

2. இழிவை எண்ணாமலே

சிலுவையை சுமந்தாரே

வல்லவர் அரியணையின்

வலப்பக்கம் விற்றிருக்கின்றார்

3. தமக்கு வந்த எதிர்ப்பை

தாங்கி கொண்ட அவரை

சிந்தையில் நிறுத்திடுவோம் – மனம்

சோர்ந்து போக மாட்டோம்

4. ஓட்டத்தை தொடங்கினவர்

தொடர்ந்து நடத்திடுவார் – நம்

நிறைவு செய்திடுவார்

நிச்சயம் பரிசு உண்டு

உம்மில் நான் வாழ்கிறேன்
உம்மில் நான் வாழ்கிறேன்

உமக்குள்ளே வளர்கிறேன்

1. ஜீவத்தண்ணீராம் உமக்குள்ளே

வேர் கொண்டு வளரும் மரம்தானே

படர்ந்திடுவேன் நிழல் தருவேன்

பறவைகள் தங்கும் வீடாவேன்

2. அடித்தளம் இரட்சகர் இயேசுவின் மேல்

அமைந்து உயரும் கட்டடம் நான்

பெருங்காற்று அசைப்பதில்லை

பெருமழையோ பிரிப்பதில்லை

3. இயேசுவே எனது தலையானீர்

நானோ உமது உடலானேன்

உம்நினைவு என் உணவு

உம் விருப்பம் என் ஏக்கம்

4. செடியான உம்மோடு இணைந்துவிட்டேன்

கொடியாய் படர்ந்து கனிதருவேன்

இலைகளெல்லாம் மருந்தாகும்

கனிகளெல்லாம் விருந்தாகும்

5. உமது வார்த்தைகள் எனக்குள்ளே

உந்தன் ஆவி என்னோடே

மீட்பளிக்கும் நறுமணம் நான்

கேட்பதெல்லாம் பெற்றுக் கொள்வேன்

நாமே திருச்சபை
நாமே திருச்சபை கிறிஸ்துவின் திரு உடல்

ஒவ்வொருவரும் அதன் தனித் தனி உறுப்புக்கள்

1. ஒரு உறுப்பு துன்பப்பட்டால்

துன்பப்பட்டால்

மற்ற அனைத்தும் துன்பப்படும்

கூடவே துன்பப்படும்

உணர்ந்திடுவோம் இணைந்திடுவோம்

ஓர் உடலாய் செயல்படுவோம்

2. ஒரு உறுப்பு புகழ் அடைந்தால்

புகழ் அடைந்தால்

மற்ற அனைத்தும் மகிழ்ச்சியுறும்

சேர்ந்து மகிழ்ச்சியுறும்

3. இயேசு கிறிஸ்து பாடுபட்டு

பகையை ஒழித்தார்

கடவுளோடு ஒப்புரவாக

ஒரு உடலாக்கிவிட்டார்

4. பொழுது இன்று சாய்வதற்குள்

சினம் தணியட்டும்

அலகைக்கு இனி இடம் வேண்டாம்

இடமே கொடுக்க வேண்டாம்

காக்கும் தெய்வம் இயேசு இருக்க
காக்கும் தெய்வம் இயேசு இருக்க

கலக்கம் என் மனமே ? கண்ணீர் ஏன் மனமே ?

1. இதுவரை உன்னை நடத்தின தேவன்

இனியும் நடத்திச் செல்வார்

எபிநேசர் அவர்தானே

2. சிலுவை சுமந்தால் சுபாவம் மாறும்

தெரிந்துகொள் மனமே

சீடன் அவன் தானே

3. பாடுகள் சகித்தால் பரமனின் வருகையில்

கூட சென்றிடலாம்

பாடி மகிழ்ந்திடலாம்

4. காண்கின்ற உலகம் நமது இல்லை

காணாத பரலோகம் தான்

நமது குடியிருப்பு

ஆண்டவரை எக்காலமும் போற்றிடுவேன்
ஆண்டவரை எக்காலமும் போற்றிடுவேன்

அவர் புகழ் எப்போதும் என் நாவில் ஒலிக்கும்

1. என்னோடே ஆண்டவரை மகிமைப்படுத்துங்கள்

ஒருமித்து அவர் நாமம் உயர்த்திடுவோம்

நடனமாடி நன்றி சொல்வோம்…

2. ஆண்டவரைத் தேடினேன் செவி கொடுத்தார்

எல்லாவித பயத்தினின்றும் விடுவித்தார்

3. அவரை நோக்கிப் பார்த்ததால் பிரகாசமானேன்

எனது முகம் வெட்கப்பட்டுப் போகவேயில்ல

4. பிள்ளை நான் கூப்பிட்டேன் பதில் தந்தாரே

நெருக்கடிகள் அனைத்தினின்றும் விடுவித்தாரே

5. கர்த்தர் நல்லவர் சுவைத்துப் பாருங்கள்

அவரை நம்பும் மனிதரெல்லாம் பாக்கியவான்கள்

6. சிங்கக் குட்டி உணவின்றி பட்டினி கிடக்கும்

ஆண்டவரை நாடுவோர்க்கு குறைவேயில்லை

நினைவு கூரும் தெய்வமே
நினைவு கூரும் தெய்வமே நன்றி

நிம்மதி தருபவரே நன்றி

நன்றி இயேசு ராஜா – (4)

1. நோவாவை நினைவு கூர்ந்ததால்

பெருங்காற்று வீசச் செய்தீரே – அன்று

தண்ணீர் வற்றியதைய்யா

விடுதலையும் வந்ததைய்யா

2. ஆபிரகாமை நினைவு கூர்ந்ததால்

லோத்துவைக் காப்பாற்றினீரே

எங்களையும் நினைவு கூர்ந்து

எங்கள் சொந்தங்களை இரட்சியுமைய்யா

3. அன்னாளை நினைவு கூர்ந்ததால்

ஆண்குழந்தை பெற்றெடுத்தாளே

மலட்டு வாழ்க்கையெல்லாம் (நீர்)

மாற்றுகிறீர் நன்றி ஐயா – எங்கள்

4. கொர்நெலியு தான தர்மங்கள் – ஒரு

தூதனைக் கொண்டு வந்தது

குடும்பத்தையும் நண்பர்களையும்

இரட்சித்து அபிஷேகித்தீரே – அவன்

5. ராகேலை நினைவு கூர்ந்ததால்

யோசேப்பை பரிசாய் தந்தீரே

இன்னுமொரு மகனைத் தருவீர்

என்று சொல்லி துதிக்கச் செய்தீரே

6. எக்காளம் ஊதும் போதெல்லாம்

எங்களை நினைக்கின்றீர்

எதிரிகளின் கையிலிருந்து

இரட்சித்துக் காப்பாற்றுகிறீர்

பயமில்லையே பயமில்லையே
பயமில்லையே…பயமில்லையே

பயமே எனக்கு இல்ல – இனி

1. அநாதி தேவன் அடைக்கலமானாரே

அவரது புயங்கள் ஆதாரமாயிற்றே

2. இரட்சிக்கப்பட்ட பாக்கியவான் நானே

எனக்கு ஒப்பான மனிதன் யாருண்டு

3. சகாயம் செய்யும் கேடகமானாரே

வெற்றி தருகின்ற பட்டணம் ஆனாரே

4. பாதுகாப்புடன் சுகமாய் வாழ்ந்திடுவேன்

திராட்சை ரசமும் தானியமும் உண்டு

5. எனது வானம் பனியைப் பெய்திடுமே

மழையைப் பொழிந்து தேசத்தை

நிரப்பிடுமே

6. எதிரி என்முன் கூனிக் குறுகிடுவான்

அவன் தலை மேலே ஏறி மிதித்திடுவேன்

நமக்கொரு தகப்பன் உண்டு
நமக்கொரு தகப்பன் உண்டு

அவரே நம் தெய்வம்

எல்லாமே அவரிலிருந்து வந்தன

நாமோ அவருக்காக வாழ்ந்திடுவோம்

1. திக்கற்ற பிள்ளைகளுக்கு தகப்பன் இவர்

தேவைகளை அறிந்த நல்ல தந்தை இவர்

உணவு ஊட்டுகிறார் உடையும் உடுத்துகிறார்

அப்பா…அப்பா…தகப்பனே

என்று கூப்பிடுவோம்

2. ஆட்கொண்டு நடத்துகிறார் அதிசயமாய்

உருவாக்கி மகிழ்கின்றார் ஒவ்வொருநாளும்

கேட்பதை கொடுத்திடுவார்

தட்டும்போது திறந்திடுவார்

3. இரக்கம் நிறைந்த தந்தை அவர்

ஆறுதல் அனைத்திற்கும் ஊற்று அவர்

கணவனை இழந்தவர்க்கு காப்பாளர் அவர்

தானே

4. குழந்தையாய் இருக்கும்போதே நேசித்தவர்

எகிப்திலிருந்து என்னை அழைத்துக்

கொண்டார் கரங்கள் பிடித்துக் கொண்டு நடக்கப்

பழக்குகிறார்

(பின்வருமாறு பாடலாம்)

எங்கள் தகப்பனே எங்கள் தந்தையே

எல்லாமே உம்மிடம் இருந்து வந்தன

எந்நாளும் உமக்குதானே ஆராதனை

1. இரக்கம் நிறைந்த தந்தை நீரே

ஆறுதல் அனைத்திற்கும் ஊற்று நீரே

கணவனை இழந்தவர்க்கு காப்பாளர் நீர்தானைய்யா

அப்பா.. அப்பா.. தகப்பனே நன்றி ஐயா

இன்று முதல் நான் உன்னை
இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன்

எல்லையில்லா நன்மைகளால் நிரப்பிடுவேன்

1. பெரிய இனமாக்கி ஆசீர்வதிப்பேன்

உமது பெயரை நான் உயர்த்திடுவேன்

ஆசீர்வாத வாய்க்காலாய் நீ இருப்பாய்

2. செல்லும் இடமெல்லாம்

காவலாய் நான் இருப்பேன்

சொன்னதை செய்திடுவேன்

கைவிடமாட்டேன்

நீ வாழும் இந்த தேசம் உனக்கு தந்திடுவேன்

3. பரவி பாய்கின்ற ஆறுகள் நீதானே

நதியோரம் வளருகின்ற தோட்டமும் நீதானே

வாசனை தருகின்ற சந்தனமும் நீதானே

4. பத்தில் ஒரு பங்கு நீ கொடுத்தால்

வானத்தின் பலகனிகள் திறந்திடுவேன்

இடம் கொள்ளாதமட்டும் நிரப்பிடுவேன்

5. எனது சாயலாய் உருவாக்கி நடத்துகிறேன்

பலுகி பெருகிடுங்கள் பூமியெல்லாம்

நிரம்பிடுங்கள் உயிர் வாழும் அனைத்தின் மேல்

ஆளுகை செய்திடுங்கள்