Volume -31 – Tamil Devotional Song Lyrics

எப்போதும் என் முன்னே
எப்போதும் என் முன்னே

உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன்

என் மேய்ப்பர் நீர்தானையா

குறை ஒன்றும் எனக்கில்லையே

என் நேசரே என் மேய்ப்பரே

எப்போதும் நீர்தானையா

என் முன்னே நீர்தானையா

1. உம் இல்லம் ஆனந்தம்

பரிபூரண ஆனந்தம்

பேரின்பம் நீர்தானையா

நிரந்தர பேரின்பமே – என் நேசரே

2. என் இதயம் மகிழ்கின்றது

உடலும் இளைப்பாறுது

எனைக் காக்கும் தகப்பன் நீரே

பரம்பரைச் சொத்தும் நீரே

3. என் செல்வம் என் தாகம்

எல்லாமே நீர்தானையா

எனக்குள்ளே வாழ்கின்றீர்

அசைவுற விடமாட்டீர்

உயிரினும் மேலானது
உயிரினும் மேலானது

உந்தன் பேரன்பு

எனவே பாடுகிறேன்

என் உயிர் இருக்கும்வரை

1. உம்மைத்தானே உறுதியுடன்

தினமும் பற்றிக் கொண்டேன்

உம் நிழலில் தானே களிகூர்ந்து

தினமும் பாடுகிறேன்

உந்தன் மனதுருக்கம் தினமும் தாங்குதையா

போற்றி போற்றி புகழ்கின்றேன்

வாழ்த்தி வாழ்த்தி வணங்குகிறேன் – உயிரி

2. பகலெல்லாம் பாடுகின்றேன்

இரவெல்லாம் தியானிக்கின்றேன்

ஏங்குதையா என் இதயம்

திருமுகம் காண வேண்டும்

எப்போது வருவீரையா – போற்றி

3. நீரே என் தேவன் அதிகாலை தேடுகிறேன்

உம் சமூகம் ஓடி வந்தேன் இது தானே என் விருந்து

உம் வசனம் தியானிக்கிறேன்

அது தானே என் மருந்து

மறுரூபமாகனுமே மகிமையில் மூழ்கனுமே

அப்பா உம் பாதம்
அப்பா உம் பாதம் அமர்ந்துவிட்டேன்

அன்பின் தகப்பன் நீர்தானைய்யா

செய்த பாவங்கள் கண்முன்னே

வருந்துகிறேன் நான் கண்ணீரோடு

என்னைக் கழுவி கழுவி தூய்மையாக்கும்

கல்வாரி இரத்தத்தாலே

நான் பனியைப் போல வெண்மையாவேன்

முற்றிலும் வெண்மையாவேன்

இயேசையா – (4)

1. துணிகரமாய் நான் தவறு செய்தேன்

துணிந்து பாவம் செய்தேன்

நோக்கிப் பார்க்க பெலனில்லையே

தூக்கி நிறுத்தும் என் தெய்வமே – என்னைக்

2. கிழக்கு மேற்கு உள்ள தூரம்

உந்தன் இரக்கம் உயர்ந்ததையா

இல்லையே எல்லை உம் அன்பிற்கு

இரக்கத்தின் செல்வந்தர் நீர்தானைய்யா

3. என் குற்றங்கள் நீர் நினைவு கூர்ந்தால்

உம்முன்னே நிற்க முடியாதையா

தகப்பன் மகனை மன்னிப்பதுபோல்

மன்னிக்கும் தெய்வம் நீர்தானையா

4. முள்முடி கிரீடம் பார்க்கின்றேன்

முகமெல்லாம் இரத்தம் காண்கின்றேன்

ஜீவன் தந்தல்லோ மீட்டீரையா

தேவனே நான் என்ன சொல்வேன்

அப்பா உம் பாதம் அமர்ந்துவிட்டேன்

அன்பின் தகப்பன் நீர்தானையா

கிருபையின்படியே மனமிரங்கி

மீட்பின் மகிழ்ச்சி தந்தீரையா

இயேசையா நன்றி – (4)

துதித்திடுவேன் முழு இதயத்தோடு
துதித்திடுவேன் முழு இதயத்தோடு

புகழ்ந்திடுவேன் முழு உள்ளத்தோடு

உன்னதரே உம்மில் மகிழ்ந்து

களிகூர்கின்றேன் தினமும்

1. ஒடுக்கப்படுவோர்க்கு அடைக்கலமே

நெருக்கடி வேளையில் புகலிடமே

அடைக்கலமே புகலிடமே

முழு இதயத்தோடு துதித்திடுவேன்

முழு உள்ளத்தோடு புகழ்ந்திடுவேன் – துதித்து

2. நாடித் தேடி வரும் மனிதர்களை

டாடி கைவிடுவதேயில்லை

ஒருபோதும் கைவிடமாட்டீர் – முழு

3. வறியவர்கள் மறக்கப்படுவதில்லை

எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை

எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை

4. உமது திருநாமம் அறிந்தவர்கள்

உம்மை நம்பி தினம் துதிப்பார்கள்

களிகூர்ந்து மகிழ்வார்கள் – தினம்

துயரத்தில் கூப்பிட்டேன்
1. துயரத்தில் கூப்பிட்டேன் உதவிக்காய் கதறினேன்

அழுகுரல் கேட்டீரையா – (2)

குனிந்து தூக்கினீர் பெரியவனாக்கினீர்

உமது காருண்யத்தால் – (2)

குனிந்து தூக்கினீரே பெரியவனாக்கினீரே

உமது காருண்யத்தால் பெரியவனாக்கினீரே – (2)

2. எனது விளக்கு எரியச் செய்தீர்

இரவைப் பகலாக்கினீர் – (2)

எரிந்து கொண்டிருப்பேன் எப்போதும் உமக்காய்

என் ஜீவன் பிரியும் வரை – (2)

எரிந்து கொண்டேயிருப்பேன் எப்போதுமே உமக்காய்

என் ஜீவன் பிரியும் வரை எரிந்து கொண்டேயிருப்பேன் – (2)

3. நான் நம்பும் கேடகம் விடுவிக்கும் தெய்வம்

நீர்தான் நீர்தானையா – (2)

தூயவர் தூயவர் துதிக்குப் பாத்திரர்

ஆறுதல் நீர்தானையா – (2)

தூயவர் தூயவரே துதிக்குப் பாத்திரரே

ஆறுதல் நீர்தானையா துதிக்குப் பாத்திரரே – (2)

4. சேனைக்குள் பாய்ந்தேன் உந்தன் தயவாலே

மதிலைத் தாண்டிடுவேன் – (2)

புகழ்ந்து பாடுவேன் உம்மையே உயர்த்துவேன்

உயிர் வாழும் நாட்களெல்லாம் – (2)

புகழ்ந்து பாடிடுவேன் உம்மையே உயர்த்திடுவேன்

உயிர் வாழும் நாட்களெல்லாம் உம்மையே உயர்த்திடுவேன்

தேங்க் யூ சொல்லுவேன்
தேங்க் யூ சொல்லுவேன்

தினமும் சொல்லுவேன்

தேங்க் யூ தேங்க் யூ பாதர்

பாதர் தேங்க் யூ

ஜீசஸ் தேங்க் யூ – ஹெவன்லீ

நன்றி சொல்லுவேன்

தினமும் சொல்லுவேன்

நன்றி இயேசு ராஜா

1. எல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரையா – (2)

என்னையும் கண்டீரையா

எப்படி நான் நன்றி சொல்லுவேன்

அப்பா நன்றி அன்பே நன்றி – நன்றி சொல்லு

2. யேகோவா யீரே எல்லாமே பார்த்துக் கொள்வீர் -(2)

எல்லாமே பார்த்துக் கொள்வீர்

எப்படி நான் நன்றி சொல்லுவேன் – (2) அப்பா

3. யேகோவா ரஃப்பா இதுவரை சுகம் தந்தீரே – (2)

இதுவரை சுகம் தந்தீரே

எப்படி நான் நன்றி சொல்லுவேன் – (2) அப்பா

4. யேகோவா ஷாலோம் சமாதானம் தந்தீரையா – (2)

சமாதானம் தந்தீரையா சர்வ வல்லவரே – (2) அப்பா

5. யேகோவா ரூவா என் மேய்ப்பர் நீர்தானையா – (2)

என் மேய்ப்பர் நீர்தானையா

எப்படி நான் நன்றி சொல்வேன் – (2)- அப்பா

அப்பா அல்பா ஒமெகா
அப்பா அல்பா ஒமெகா

புகழ் உமக்கே எப்போதும்

தொடக்கமும் முடிவும் நீரே

துதிக்குப் பாத்திரரே – அப்பா

1. பரிசுத்த வாழ்வு நான் வாழ

பிரித்தீரே பிறக்கும் முன்னாலே

புகழ் உமக்கே புகழ் உமக்கே – (2) – தொடக்க

2. மறுபடி பிறக்கச் செய்தீரே

கிருபையால் இரட்சித்தீரே – புகழ்

3. உம் அன்பை ஊற்றினீர் என்னில்

உன்னத அபிஷேகத்தாலே

4. இரக்கத்தில் செல்வந்தர் நீரே

இதயத்தில் தீபமானீரே

5. இறை இயேசு அரசுக்குள் அழைத்தீர்

இருளின் ஆட்சியைக் கலைத்தீர்

உயிருள்ள திருப்பலியாய்
உயிருள்ள திருப்பலியாய்

உடலைப் படைக்கின்றேன்

உள்ளம் தந்துவிட்டேன்  – (2)

தகப்பனே தந்துவிட்டேன்

தங்கிவிடும் நிரந்தரமாய் – (2)

1. உலகப்போக்கில் நடப்பதில்லை

ஒத்த வேஷம் தரிப்பதில்லை – (2)

என் மனம் புதிதாக வேண்டும்

திருச்சித்தம் புரிந்து வாழ வேண்டும் – (2)

2. உள்ளத்தின் நினைவுகள் உமக்கு

உகந்தவனவாய் இருப்பதாக – (2)

நாவின் சொற்கள் எல்லாம்

ஏற்றனவாய் இருப்பதாக – (2)

3. எண்ணங்கள் ஏக்கங்கள் உமதாகணும்

இன்னும் அதிகமாய் நேசிக்கணும் – (2)

உன்னதர் பணி செய்ய வேண்டும்

என் உயிர் இருக்கும்வரை – (2)

பலியிடு துதி பலியிடு
பலியிடு துதி பலியிடு

வலி விலகும் வாழ வழி பிறக்கும்

துதி பலி அது சுகந்த வாசனை

நன்றி பலி அது உகந்த காணிக்கை

1. துதி பலி செலுத்திட பொருத்தனை செய்ததும்

மீன் அன்று கக்கியது கரையிலே

யோனாவை கக்கியது கரையிலே – அன்று

2. நோவாவின் பலிதனை நுகர்ந்தார் நம் கர்த்தர்

சுகந்த வாசனையாய்

பலுகிப் பெருகச் செய்தார் – அன்று

3. நல்லவர் கர்த்தர் என்று எல்லாரும் துதிக்கையில்

ஆலயத்தை மேகம் மூடியது

கண்டார்கள் கர்த்தர் மகிமையை

4. சீலாவும் பவுலும் சிறையிலே துதித்ததால்

கட்டுக்கள் கழன்று போயின

ஜெயிலர் இரட்சிக்கப்பட்டான்

அந்த அதிகாரி இரட்சிக்கப்பட்டான்

5. துதி செய்யாத் தொடங்கினதும்

எதிரிகள் தங்களுக்குள்

வெட்டுண்டு மடிந்து போயினர்

எல்லாரும் பிரேதமானார்கள்