Volume -32 – Tamil Devotional Song Lyrics

எப்போதும் உம்மோடுதான்
எப்போதும் உம்மோடுதான்

உம் வலக்கரம் என்னோடுதான்

என் வாஞ்சையெல்லாம் நீர்தானே

என் வாழ்க்கை எல்லாம் உம் புகழ்தானே

ஆராதனை ஆராதனை – (2)

ஆயுள் இருக்கும்வரை (என்) – எப்போதும்

1. பரலோகத்தில் உம்மையல்லாமல்

எனக்கு யாருண்டு

பூலோகத்தில் உம்மைத்தவிர

வேறே விருப்பமில்லை – எனக்கு

2. என்றென்றைக்கும் என் உள்ளத்தின்

பெலனே நீர்தானையா

உம் சித்தம் போல நடத்துகிறீர்

மகிமையில் ஏற்றுக் கொள்வீர் – உம்

3. காருண்யத்தின் கயிறுகளால்

கட்டி என்னை இழுத்துக் கொண்டீர்

பேரன்பினால் அணைத்துக் கொண்டீர் – உம்

பெரியவனாக்கி விட்டீர் – என்னைப்

4. கழுத்தில் உள்ள நுகம் நீக்கி

நிமிர்ந்து நடக்கச் செய்தீர் – என்

கற்றுக் கொடுத்தீர் கரம் பிடித்து

கைவிடாமல் காப்பாற்றினார் – இதுவரை

5. உம்மைத்தானே அடைக்கலமாய்

அண்டிக் கொண்டேன் அனுதினமும்

புகலிடமே என் மறைவிடமே

உம் புகழ்தனை சொல்லி வருவேன்

என்ன நடந்தாலும்
என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும்

உமக்கு நன்றி சொல்வேன்

உமது புகழ் பாடுவேன்

1. தேடி வந்தீரே தெரிந்து கொண்டீரே

தூய மகனாக்கினீர்

துதிக்கும் மகளாக்கினீர் – இராஜா

இதயம் நிறைந்த நன்றி சொல்லுவேன்

இரவும் பகலும் புகழ் பாடுவேன் – என்ன

2. ஆவியினாலே அன்பையே ஊற்றி

பாவங்கள் நீக்கினீரே

சுபாவங்கள் மாற்றினீரே – இராஜா

3. இராஜாவின் திருமுகம் காண்கின்ற நாளை

எதிர்நோக்கி ஓடுகிறேன் – இயேசு

நினைத்துப் பாடுகிறேன் – இராஜா

4. இரத்தத்தினாலே ஒப்புரவாக்கி

உறவாடச் செய்தீரையா

உம்மோடு இணைத்தீரையா

5. மரணத்தை அழித்து அழியா ஜீவனை

அறிமுகப்படுத்தினீரே

அறிவிக்க அழைத்தீரே – இதை

பெருமழை பெருவெள்ளம்
பெருமழை பெருவெள்ளம் வரப்போகுது

விரைவில் வரப்போகுது

வந்துவிடு நுழைந்துவிடு – இயேசு

இராஜாவின் பேழைக்குள் – நீ

1. மலைகள் அமிழ்ந்தன எல்லா

உயிர்களும் மாண்டன

பேழையோ உயர்ந்தது

மேலே மிதந்தது – வந்துவிடு

2. குடும்பமாய் பேழைக்குள்

எட்டுப்பேர் நுழைந்தனர்

கர்த்தரோ மறவாமல்

நினைவு கூர்ந்தாரே

3. நீதிமானாய் இருந்ததால்

உத்தமானாய் வாழ்ந்ததால் – நோவா

கர்த்தரோடு நடந்ததால்

கிருபை கிடைத்தது

4. பெருங்காற்று வீசச் செய்தார்

தண்ணீர் வற்றச் செய்தார்

நோவா பீடம் கட்டி

துதி பலி செலுத்தினார்

நித்திய நித்தியமாய்
நித்திய நித்தியமாய்

உம் நேம் நிலைத்திருக்கும்

தலைமுறை தலைமுறைக்கும்

உம் பேம் பேசப்படும்

நித்தியமே என் சத்தியமே

நிரந்தரம் நீர்தானையா

1. யாக்கோபை உமக்கென்று தெரிந்தெடுத்தீரே

இஸ்ரவேலை பிரித்தெடுத்து துதிக்கச் செய்தீர்

வல்லவர் நீர்தானே

நல்லவர் நீர்தானே

நான் பாடும் பாடல் நீர்தானே

தினம் தேடும் தேடல் நீர்தானே – நித்தியமே

2. வானத்திலும் பூமியிலும் உம் விருப்பம் செய்கின்றீர்

மேகங்கள் எழச்செய்து மழை பொழிகின்றீர்

பெரியவர் நீர்தானே -என்

பிரியமும் நீர்தானே – நான் பாடும்

3. வார்த்தையினால் வானங்கள் தோன்றச் செய்தீரே – உம்

சுவாசத்தினால் விண்மீன்கள் மிளிரச் செய்தீரே

சகலமும் படைத்தவரே

சர்வ வல்லவரே – நான் பாடும்

4. வருடத்தை நன்மையினால் முடிசூட்டுகிறீர்

பாதையெல்லாம் நெய்யாகப் பொழியச் செய்கின்றீர்

காண்பவர் நீர் தானே

தினம் காப்பவர் நீர்தானே – நான் பாடும்

5. மண்ணுலகை விசாரித்து மகிழச் செய்கின்றீர்

தானியங்கள் விளையச் செய்ய தண்ணீர் பாய்ச்சுகிறீர்

மீட்பர் நீர்தானே என்

மேய்ப்பர் நீர்தானே – நான் பாடும்

என் மீட்பர் என் நேசர்
என் மீட்பர் என் நேசர் சந்நிதியில்

எப்போது நான் நிற்கப் போகிறேன்

ஏங்குகிறேன் உம்மைக் காண

எப்போது உம் முகம் காண்பேன்

தாகமாய் இருக்கிறேன்

அதிகமாய்த் துதிக்கிறேன் – நான்

1. மானானது நீரோடையை

தேடி தவிப்பது போல்

என் நெஞ்சம் உம்மைக்காண

ஏங்கித் தவிக்கிறது – தாகமாய்

2. பகற்காலத்தில் உம் பேரன்பை

கட்டளையிடுகிறீர்

இராக்காலத்தில் உம் திருப்பாடல்

என் நாவில் ஒலிக்கிறது

3. ஆத்துமாவே நீ கலங்குவதேன்

நம்பிக்கை இழப்பதேன் -என்

கர்த்தரையே நீ நம்பியிரு

அவர் செயல்களை நினைத்துத் துதி

ஜீவனுள்ள தேவன்

அவர் சீக்கிரம் வருகிறார் – ஏங்குகிறேன்

என் உள் உறுப்புகள்
என் உள் உறுப்புகள் உண்டாக்கியவர் நீர்தானே

தாயின் கருவில் உருத் தந்தவர் நீர்தானே

வியத்தகு முறையில் என்னைப் படைத்தீரே

நன்றி நவில்கின்றேன்

நன்றி உமக்கு நன்றி – (2) – அப்பா

1. அமர்வதையும் எழுவதையும்

அப்பா நீர் அறிந்திருக்கின்றீர்

எண்ணங்களை என் ஏக்கங்களை – என் – (2)

எல்லாமே அறிந்திருக்கின்றீர் – அப்பா

2. உம்மை விட்டு மறைவாக

எங்கே நான் ஓட முடியும்

உம் சமூகம் இல்லாமலே

எங்கே வாழ முடியும் – அப்பா

3. உம்மை வருத்தும் காரியங்கள்

இல்லாமல் அகற்றி விடும்

நித்தியமான உம் பாதையில்

நித்தமும் நடத்துமையா

செடியே திராட்சைச் செடியே
செடியே திராட்சைச் செடியே

கொடியாக இணைந்து விட்டேன்

உம் மடிதான் என் வாழ்வு

உம் மகிழ்ச்சிதான் என் உயர்வு

1. கத்தரித்தீரே தயவாய்

கனிகள் கொடுக்கும் கிளையாய்

சுத்தம் செய்தீரே இரத்தத்தால்

சுகந்த வாசனையானேன்

2. பிதாவின் மகிமை ஒன்றே

பிள்ளை எனது ஏக்கம்

மிகுந்த கனிகள் கொடுப்பேன்

உகந்த சீடனாவேன்

3. ஆயன் சத்தம் கேட்டு

உம் அன்பில் நிலைத்து வாழ்வேன்

பிரிக்க இயலாதையா

பறிக்க முடியாதையா

என் தகப்பன் நீர்தானையா
என் தகப்பன் நீர்தானையா

எல்லாமே பார்த்துக் கொள்வீர்

எப்போதும் எவ்வேளையும் – உம்

கிருபை என்னைத் தொடரும்

1. மாண்புமிக்கவர் நீர்தானே

மிகவும் பெரியவர் நீர்தானே

உம்மையே புகழ்வேன் -ஓய்வின்றி

உம்மைத்தான் பாடுவேன் – பெலத்தோடு

உயிருள்ள நாளெல்லாம் – (2) – என் தகப்பன்

2. தாழ்ந்தோரை நீர் உயர்த்துகிறீர்

விழுந்தவரை நீர் தூக்குகிறீர் – உம்மையே

3. ஏற்ற வேளையில் அனைவருக்கும்

ஆகாரம் நீர் தருகின்றீர்

4. சகல உயிர்களின் விருப்பங்களை

திருப்தியாக்கி நீர் நடத்துகிறீர்

5. நோக்கிக் கூப்பிடும் யாவருக்கும்

தகப்பன் அருகில் இருக்கின்றீர்

6. அன்பு கூருகின்ற அனைவரையும்

காப்பாற்றும் தெய்வம் நீர்தானே

7. துதிக்குப் பாத்திரர் நீர் தானே

தூயவரும் நீர் தானே

8. இரக்கமும் கனிவும் உடையவரே

நீடிய சாந்தம் உமதன்றோ

ஆனந்த மகிழ்ச்சி அப்பா
ஆனந்த மகிழ்ச்சி அப்பா சமூகத்தில்

எப்போதும் இருக்கையிலே

நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்?

ஏன், ஏன் நீ புலம்புகிறாய்? – (2)

1. கர்த்தரை நம்பும் ஒருவன் மேலும்

குற்றம் சுமராது – (2)

காத்திடுவார் உயர்த்திடுவார்

காத்து நடத்திடுவார் – (2)

காத்து நடத்திடுவார் – என்னை – (2)

2. தெரிந்துக் கொண்டாரே தாசன் நான்தான்

சிநேகிதனும் நான்தான் – (2)

அழைத்த தெய்வம் ஆகாதவன் என்று

தள்ளி விட மாட்டார் – (2)

தள்ளி விடமாட்டார் – ஒரு நாளும் – (2)

3. கைகள் நீட்டு கோலை உயர்த்து

கடலைப் பிரித்துவிடு – (2)

காய்ந்த தரையில் நடந்துப் போவாய்

எதிரி காண மாட்டாய் – (2)

வியாதி காண மாட்டாய் – இனி நீ – (2)

அபிஷேகம் என் தலைமேலே
அபிஷேகம் என் தலைமேலே

ஆவியானவர் எனக்குள்ளே

முழங்கிடுவேன் சுவிசேஷம்

சிறுமைப்பட்ட அனைவருக்கும்

அபிஷேகம் என்மேலே

ஆவியானவர் எனக்குள்ளே

1. இதயங்கள் நொறுக்கப்பட்டோர்

ஏராளம் ஏராளம்

காயம் கட்டுவேன் தேசமெங்கும்

இயேசுவின் நாமத்தினால்

2. சிறையிலுள்ளோர் ஆயிரங்கள்

விடுதலை பெறணுமே

கட்டவிழ்க்கணும் கட்டவிழ்க்கணும்

கட்டுக்களை உடைக்கணும்

3. துதியின் உடை போர்த்தணுமே

ஒடுங்கின ஜனத்திற்கு

துயரத்துக்குப் பதிலாக

ஆனந்த தைலம் வேண்டுமே

4. கிருபையின் கால இதுவன்றோ

அறிவிக்கணும் அதிவேகமாய்

இரட்சகர் இயேசு வரப்போகிறார்

ஆயத்தமாகணுமே