Singer : T. M. Soundararajan

Music by : M. S. Vishwanathan

Male : Ezhu thalaimuraiyin munbirundhadhoru
Engal vamsa magan natta vael

Male : Ezhu thalaimuraiyin munbirundhadhoru
Engal vamsa magan natta vael

Male : Endha naalinilum kuttravaaligalai
Kondru theerthu vida kattra vael

Male : Pagaivar anja varum kurudhi konja varum
Pazhiyai vaanga varum veera vael

Male : Paavam seibavarkku paadamaaga varum
Bakthi dhevadhaiyin sakthi vael

Male : Bandha paasangalai endha naalinilum
Paarppadhillai indha vettri vael
Bandha paasangalai endha naalinilum
Paarppadhillai indha vettri vael
Indha boomi vittu vandha podhu
Uyir vaangi thaan padhiyum indha vael
Indha boomi vittu vandha podhu
Uyir vaangi thaan padhiyum indha vael

Male : Maariyaathaa saanidhiyil
Vaeleduthu nattu vecha
Kaaranathai cholren kaeladaa
Ada maanamulla aathi appan
Aana pazhi theerthu vittu
Thaaneduthu natta vaeladaa

Male : Naachi muthu kaundaru
Katti vandha pendaatti
Nallaval oruthi irundhaa

Male : Ava ulla padi thaanirukka
Ombadhu paer vappaatti
Oorukkullae kooda irundhaa

Male : Uthamamaam pathiniyaai
Sathiyam thavaraamal
Otha pilla pethu irundhaa
Andha pacha pulla munnilaiyil
Pathiniyai naachi muthu
Nithamumae pottu odhachaan
Nithamumae pottu odhachaan

Male : Thaai vadittha kanneerai
Thaan paartha pillaikku
Vaai paechu ninnadhaeyadaa
Pilla vaai izhandhu ponaalum
Paal kudittha nenjukkullae
Vanjam onnu vandhadhaeyadaa

Male : Vellaatti munnilaiyil vellaadi pola aval
Vaedhanaiyum konjamalladaa
Andha vaedhanaiyai paatha pulla
Thaanazhndha kanneeru
Kaavaeriyai minjumaeyadaa…
Kaavaeriyai minjumaeyadaa…

Male : Vammaulla pennorutthi
Vanjaganukku vaaithu vittaal
Pinnum avan pona kadhai perusaachu
Andha paerazhagi sonnadhu thaan seyalaachu

Male : Pattathu raaniyai nee
Pallaakkil anuppi vittaal
Pakkatthil naan iruppen endraalae
Andha paadhagan manaivi thanai kondraanae
Paadhagan manaivi thanai kondraanae

Male : Appaavin seyal paarthaan
Ammaavin kolai paarthaan
Appodhu seeri vandhaan oomaiyadaa
Ammaa… ammaa… ammaa…
Paesi ammaa ammaavendrae thudithaan
Pillaiyadaa

Male : Kannilae neruppedutha
Vanna magan thaan paatthu
Pennarasi thaan azhaithaal anbinilae
Than paechinaal adakki vittaal mudivinilae
Paechinaal adakki vittaal mudivinilae

Male : Kattuppatta andha magan
Kaathirundhaandaa
Andha kaalam varum neram varai
Paathirundhaandaa
Thattu ketta thandhan avan pangaali aanaan
Mahan thaayuraitha vaakkin padi pagaiyaaliyaanaan

Male : Hahahaha hahahahaa
Ennikku unnoda attoozhiyamum akkiramamum
Ellaiyai meeri indha graamathaiyae baadhikkudho
Annikkae nee en appan illa pangaali
Unna theetthu katta utharava kuduthuttaa engammaa

Male : Naalaikku ooraiyae pagaichukkittu
Nee kallu kada therakka pora
Enga aathaa sonna neram vandhuruchu

Male : Aaru padai vaelena aadi varugindraan…
Soora vadhan maeni thanil paaya varugindraan…
Thandhai ena pillai ena paasam ini illai…
Sadhadhiyil indha vadivael uraikkum ellai…

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : ஏழு தலைமுறையின் முன்பிருந்ததொரு
எங்கள் வம்ச மகன் நட்ட வேல்

ஆண் : ஏழு தலைமுறையின் முன்பிருந்ததொரு
எங்கள் வம்ச மகன் நட்ட வேல்

ஆண் : எந்த நாளினிலும் குற்றவாளிகளைக்
கொன்று தீர்த்து விடக் கற்ற வேல்

ஆண் : பகைவர் அஞ்ச வரும் குருதி கொஞ்ச வரும்
பழியை வாங்க வரும் வீர வேல்

ஆண் : பாவம் செய்பவருக்கு பாடமாக வரும்
பக்தி தேவைதையின் சக்திவேல்

ஆண் : பந்த பாசங்களை எந்த நாளினிலும்
பார்ப்பதில்லை இந்த வெற்றிவேல்
பந்த பாசங்களை எந்த நாளினிலும்
பார்ப்பதில்லை இந்த வெற்றிவேல்
இந்த பூமி விட்டு வந்தபோது உயிர்
வாங்கித்தான் பதியும் இந்த வேல்
இந்த பூமி விட்டு வந்தபோது உயிர்
வாங்கித்தான் பதியும் இந்த வேல்

ஆண் : மாரியாத்தா சந்நிதியில்
வேலெடுத்து நட்டு வச்ச
காரணத்தை சொல்றேன் கேளடா
அட மானமுள்ள அத்தியப்பன்
ஆன பழி தீர்த்துவிட்டு
தானெடுத்து நட்ட வேலடா

ஆண் : நாச்சி முத்துக் கவுண்டரு
கட்டி வந்த பொண்டாட்டி
நல்லவளொருத்தி இருந்தா

ஆண் : அவள் உள்ளபடி தானிருக்க
ஒன்பது பேர் வைப்பாட்டி
ஊருக்குள்ளே கூட இருந்தாள்

ஆண் : உத்தம பத்தினியாள்
சத்தியம் தவறாமல்
ஒத்தப்பிள்ளை பெத்து இருந்தா
அந்த பச்ச பிள்ளை முன்னிலையில்
பத்தினியை நாச்சி முத்து
நித்தமும் போட்டு ஒதைச்சான்…..

ஆண் : தாய் வடித்த கண்ணீரைத்
தான் பார்த்த பிள்ளைக்கு
வாய்ப்பேச்சு நின்னதேயடா
பிள்ளை வாயிழந்து போனாலும்
பால் குடித்த நெஞ்சுக்குள்ளே
வஞ்சம் ஒன்னு வந்ததேயடா

ஆண் : வெள்ளாட்டி முன்னிலையில்
வெள்ளாடு போல அவள்
வேதனையும் கொஞ்சமல்லடா
அந்த வேதனையைப் பார்த்த பிள்ளை
தானழுத கண்ணீரு
காவிரியை மிஞ்சுமடா….
காவிரியை மிஞ்சுமடா….

ஆண் : வண்ணமுள்ள பெண்ணொருத்தி
வஞ்சகனுக்கு வாய்த்து விட்டாள்
பின்னுமவன் போன கதை பெரிசாச்சு
அந்த பேரழகி சொன்னதுதான் செயலாச்சு….

ஆண் : பட்டத்து ராணியை நீ
பல்லக்கில் அனுப்பிவிட்டால்
பக்கத்தில் நானிருப்பேன் என்றாளே
அந்தப் பாதகன் மனைவிதனைக் கொன்றானே….
பாதகன் மனைவிதனைக் கொன்றானே….

ஆண் : அப்பாவின் செயல் பார்த்தான்
அம்மாவின் கொலை பார்த்தான்
அப்போது சீறி வந்தான் ஊமையடா
அம்மா…….அம்மா……அம்மா…..
பேசி அம்மாவென்றே துடித்தான்
பிள்ளையடா

ஆண் : கண்ணிலே நெருப்பெடுத்த
வண்ண மகன்தான் பார்த்து
பெண்ணரசி தானழைத்தாள் அன்பிலே
தன் பேச்சினால் அடக்கி விட்டாள் முடிவிலே
பேச்சினால் அடக்கி விட்டாள் முடிவிலே

ஆண் : கட்டுப்பட்ட அந்த மகன்
காத்திருந்தானடா
அந்த காலம் வரும் நேரம் வரை
பார்த்திருந்தானடா
தட்டிக் கேட்ட தந்தையவன் பங்காளியானான்
மகன் தாயுரைத்த வாக்கின்படி பகையாளியானான்

ஆண் : ஹஹஹஹா ஹஹஹஹா
என்னைக்கு உன்னோட அட்டூழியமும் அக்கிரமமும்
எல்லையை மீறி இந்த கிராமத்தையே பாதிக்குதோ
அன்னிக்கே நீ என் அப்பன் இல்ல பங்காளி
உன்ன தீத்து கட்ட உத்தரவ கொடுத்துட்டா எங்கம்மா

ஆண் : நாளைக்கு ஊரையே பகைச்சுகிட்டு
நீ கல்லு கடை தெறக்க போற
எங்க ஆதா சொன்ன நீரம் வந்துருச்சு

ஆண் : ஆறுபடை வேலன் என ஆடி வருகின்றான்…
சூர வந்தான் மேனிதனில் பாய வருகின்றான்…..
தந்தையென பிள்ளையென பாசம் இனியில்லை….
சந்ததியில் இந்த வடிவேல் உரைக்கும் எல்லை……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "COOLIE" title release video : Click Here