Singers : Mano and Biju Narayanan

Music by : S. A. Rajkumar

Male : Anantham anantham nam vaasal vanthaacchhu
Anantham anantham nam vaasal vanthaacchhu
Vaazhvilae vaazhvilae santhosham undaacchhu
Then podhigai megangalae ingu vanthu saerungal
En thambi vantha velaiyil thanga saaral veesungal

Chorus : Anantham anantham nam vaasal vanthaachchu
Anantham anantham nam vaasal vanthaachchu

Male : Ramanukkaaga padhinaangu aandu
Laxmanan thoongala
Nandriyai kaakka enakkoru vaaippu
Varumaa thonala

Male : Thambikku oruvan thalaiyai koduththaan
Aarae naalula
Appadi enakkoru yogam varumaa
Adhuthaan thonala

Male : Ulagaththai ezhuthattum unga pangukku
En uyir ondrum perithalla unga anbukku
Male : Kannupada poguthaiyyaa nam anbukku
Thaayai suththi poda solla venum rendu perukku
Male : En aayulthaanae kaanikkai annai endra saamikku

Chorus : Anantham anantham nam vaasal vanthaachchu
Anantham anantham nam vaasal vanthaachchu

Male : Jenmangal meedhu nambikkai illai
Aanaal solgiraen
Innoru jenmam irunthaal
Unnaiyae uravaai kekkuraen

Male : Thambiyin kanavu nichchayam palikkum
Annan solgiraen
Innoru piraviyil nee enakku annan
Varamaai ketkkuraen

Male : Vaanam polae unthan thegam karuththirukku
Aanaal alli alli thantha karam sivanthirukku
Male : Thambi chinna pillai illai meesai irukku
Aanaal uppu moottai sumakkaththaan aasai irukku
Male : En jeevan pondra annanae
Thedhi vendum poojaikku…

Chorus : Anantham anantham nam vaasal vanthaachchu
Anantham anantham nam vaasal vanthaachchu

Male : Then podhigai megangalae ingu vanthu saerungal
Male : En thambi vantha velaiyil thanga saaral veesungal

Chorus : Anantham anantham nam vaasal vanthaachchu
Anantham anantham nam vaasal vanthaachchu

பாடகர்கள் : மனோ மற்றும் பிஜு நாராயணன்

இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

ஆண் : ஆனந்தம் ஆனந்தம் நம் வாசல் வந்தாச்சு
ஆனந்தம் ஆனந்தம் நம் வாசல் வந்தாச்சு
வாழ்விலே வாழ்விலே சந்தோசம் உண்டாச்சு
தென் பொதிகை மேகங்களே இங்கு வந்து சேருங்கள்
என் தம்பி வந்த வேளையில் தங்க சாரல் வீசுங்கள்

குழு : ஆனந்தம் ஆனந்தம் நம் வாசல் வந்தாச்சு
வாழ்விலே வாழ்விலே சந்தோசம் உண்டாச்சு

ஆண் : ராமனுக்காக பதினான்கு ஆண்டு
லெட்சுமணன் தூங்கல
நன்றியை காக்க எனக்கொரு வாய்ப்பு
வருமா தோணல

ஆண் : தம்பிக்கு ஒருவன் தலையை கொடுத்தான்
ஆறே நாளுல
அப்படி எனக்கொரு யோகம் வருமா
அதுதான் தோணல

ஆண் : உலகத்தை எழுதட்டும் உங்க பங்குக்கு
என் உயிர் ஒன்றும் பெரிதல்ல உங்க அன்புக்கு
ஆண் : கண்ணுபட போகுதய்யா நம் அன்புக்கு
தாயை சுத்தி போட சொல்ல வேணும் ரெண்டு பேருக்கு
ஆண் : என் ஆயுள்தானே காணிக்கை அன்னை என்ற சாமிக்கு

குழு : ஆனந்தம் ஆனந்தம் நம் வாசல் வந்தாச்சு
வாழ்விலே வாழ்விலே சந்தோசம் உண்டாச்சு

ஆண் : ஜென்மங்கள் மீது நம்பிக்கை இல்லை
ஆனால் சொல்கிறேன்
இன்னொரு ஜென்மம் இருந்தால்
உன்னையே உறவாய் கேக்குறேன்

ஆண் : தம்பியின் கனவு நிச்சயம் பலிக்கும்
அண்ணன் சொல்கிறேன்
இன்னொரு பிறவியில் நீ எனக்கு அண்ணன்
வரமாய் கேக்குறேன்

ஆண் : வானம் போலே உந்தன் தேகம் கருத்திருக்கு
ஆனால் அள்ளி அள்ளி தந்த கரம் சிவந்திருக்கு
ஆண் : தம்பி சின்னப் பிள்ளை இல்லை மீசை இருக்கு
ஆனால் உப்பு மூட்டை சுமக்கத்தான் ஆசை இருக்கு
ஆண் : என் ஜீவன் போன்ற அண்ணனே
தேதி வேண்டும் பூஜைக்கு…..

குழு : ஆனந்தம் ஆனந்தம் நம் வாசல் வந்தாச்சு
வாழ்விலே வாழ்விலே சந்தோசம் உண்டாச்சு

ஆண் : தென் பொதிகை மேகங்களே இங்கு வந்து சேருங்கள்
ஆண் : என் தம்பி வந்த வேளையில் தங்க சாரல் வீசுங்கள்

குழு : ஆனந்தம் ஆனந்தம் நம் வாசல் வந்தாச்சு
வாழ்விலே வாழ்விலே சந்தோசம் உண்டாச்சு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here