Kaiyile Vaanginen Paiyile Podalai Song Lyrics is a track from Irumbu Thirai Tamil Film – 1960, Starring Sivaji Ganesan, Vyjayanthimala, B. Saroja Devi and Others. This song was sung by Thiruchi Loganathan and the music was composed by S. V. Venkatraman. Lyrics works are penned by Kothamangalam Subbu.
Singer : Thiruchi Loganathan
Music Director : S. V. Venkatraman
Lyricist : Kothamangalam Subbu
Male : Kaiyilae vaanginen payila podalae
Kaasu pona idam theriyalae
Kaiyilae vaanginen payila podalae
Kaasu pona idam theriyalae
En kadhali pappa karanam ketpaa
Yaedhu solvathendrum theriyalae
Yaezhaikku kaalam sariyillae
Male : Kaiyilae vaanginen payila podalae
Kaasu pona idam theriyalae
Male : Maasam muppathu naalum uzhaichchu
Varumai pidichchu uruvam ilaichchu
Kaasu vanthaa kadankaaran ellaam
Kanakku noteoda nikkuraan
Vanthu enakku unakkunnu pikkuraan
Kaasu vanthaa kadankaaran ellaam
Kanakku noteoda nikkuraan
Vanthu enakku unakkunnu pikkuraan
Male : Kaiyilae vaanginen payila podalae
Kaasu pona idam theriyalae
Male : Sottu sottaa vervai vittaa
Pattiniyaai paadu pattaa
Kattu kattaa nottu seruthu
Kettikkaaran pottiyilae
Athu kuttiyum poduthu vattiyilae
Kattu kattaa nottu seruthu
Kettikkaaran pottiyilae
Athu kuttiyum poduthu vattiyilae
Male : Kaiyilae vaanginen payila podalae
Kaasu pona idam theriyalae
Male : Vithavithamaai thunigal irukku
Vilaiya kettaa nadukkam varuthu
Vagai vagaiyaa nagaigal irukku
Madiyai paaththaa mayakkam varuthu
Male : Edhaiyedhaiyo vanganuminnu
Annae edhaiyedhaiyo vanganuminnu
Ennamirukku vazhiyillae
Idhai ennaamalirukkavum mudiyallae
Male : Kaiyilae vaanginen payila podalae
Kaasu pona idam theriyalae
Male : Kannukku azhagaa ponna padachchaan
Ponnukku thunaiyaa aanai padachchaan
Onnukku paththaa selvaththa padachchaan
Ulagam neraiya inbaththa padachchaan
Male : Ennai pola palaraiyum padaichchu annae
Ennai pola palaraiyum padaichchu
Idhukkum adhukkum yaenga vachchaan
Yaezhaiyai kadavul yaen padachchaan
Male : Kaiyilae vaanginen payila podalae
Kaasu pona idam theriyalae
Kaasu pona idam theriyalae
பாடகர் : திருச்சி லோகநாதன்
இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன்
பாடலாசிரியர் : கொத்தமங்கலம் சுப்பு
ஆண் : கையிலே வாங்கினேன் பையில போடலே
காசு போன இடம் தெரியலே
கையிலே வாங்கினேன் பையில போடலே
காசு போன இடம் தெரியலே
என் காதலி பாப்பா காரணம் கேட்பா
ஏது சொல்வதென்றும் தெரியலே
ஏழைக்கு காலம் சரியில்லே….
ஆண் : கையிலே வாங்கினேன் பையில போடலே
காசு போன இடம் தெரியலே
ஆண் : மாசம் முப்பது நாளும் உழைச்சு
வறுமை பிடிச்சு உருவம் இளைச்சு
காசு வந்தா கடன்காரன் எல்லாம்
கணக்கு நோட்டோட நிக்குறான்
வந்து எனக்கு உனக்குன்னு பிக்குறான்
காசு வந்தா கடன்காரன் எல்லாம்
கணக்கு நோட்டோட நிக்குறான்
வந்து எனக்கு உனக்குன்னு பிக்குறான்
ஆண் : கையிலே வாங்கினேன் பையில போடலே
காசு போன இடம் தெரியலே
ஆண் : சொட்டு சொட்டா வேர்வை விட்டா
பட்டினியாய் பாடு பட்டா
கட்டு கட்டா நோட்டு சேருது
கெட்டிக்காரன் பொட்டியிலே
அது குட்டியும் போடுது வட்டியிலே
கட்டு கட்டா நோட்டு சேருது
கெட்டிக்காரன் பொட்டியிலே
அது குட்டியும் போடுது வட்டியிலே
ஆண் : கையிலே வாங்கினேன் பையில போடலே
காசு போன இடம் தெரியலே
ஆண் : விதவிதமாய் துணிகள் இருக்கு
விலையக் கேட்டா நடுக்கம் வருது
வகை வகையா நகைகள் இருக்கு
மடியை பாத்தா மயக்கம் வருது
ஆண் : எதையெதையோ வாங்கணுமின்னு
அண்ணே எதையெதையோ வாங்கணுமின்னு
எண்ணமிருக்கு வழியில்லே
இதை எண்ணாமலிருக்கவும் முடியல்லே
ஆண் : கையிலே வாங்கினேன் பையில போடலே
காசு போன இடம் தெரியலே
ஆண் : கண்ணுக்கு அழகா பொண்ண படச்சான்
பொண்ணுக்கு துணையா ஆணை படச்சான்
ஒண்ணுக்கு பத்தா செல்வத்த படச்சான்
உலகம் நெறைய இன்பத்த படச்சான்
ஆண் : என்னைப் போல பலரையும் படைச்சு அண்ணே
என்னைப் போல பலரையும் படைச்சு
இதுக்கும் அதுக்கும் ஏங்க வச்சான்
ஏழையை கடவுள் ஏன் படச்சான்
ஆண் : கையிலே வாங்கினேன் பையில போடலே
காசு போன இடம் தெரியலே
காசு போன இடம் தெரியலே….
