Singer : Chaitra Ambadipudi
Music by : Ghibran
Female : Pesugindren pesugindren
Pechai thaandi vandhu pesugindren
Osaiyellam vesham endrae
Ullirundhae ullam pesugindren
Female : Vaazhkindra nerathai
Vaazhkindra nerathil
Vaazhkindra nermai thaan
Vaazhkai aagum
Female : Thorathil kaankindra
Megathin bramaandam
Mazhaiaagi vizhum bothu
Thunaiyaai maarum
Female : Pesugindren pesugindren
Pechai thaandi vandhu pesugindren
Ullirundhae ullam pesugindren
Female : Thanakena piditha ondrai
Salanathil thavara vittu
Palangkadhai pulidhiyilae
Yen indha moodhal
Female : Irupathai rasithu kondu
Kedaipathail uyarvu kondu
Mazhchiyil thilaithirunthaal
Theeradhae kaadhal
Female : Unnodu vaazhthaalum
Alaigalin neer aatrum
Naan kaanum ellamae
Unnaiyae serum
Maatadha kaatrukku
En kanavugal thoondil
Ennaalum yen intha komaali thedal
Female : Ada muyalaamai
Pagaiyaachu ulagamae
Salanamae
Padhumai kuda maranamae
Female : Pesugindren pesugindren
Pechai thaandi vandhu pesugindren
Osaiyellam vesham endrae
Ullirundhae ullam pesugindren
Female : Vaazhkindra nerathai
Vaazhkindra nerathil
Vaazhkindra nermai thaan
Vaazhkai aagum
Female : Thorathil kaankindra
Megathin bramaandam
Mazhaiaagi vizhum bothu
Thunaiyaai maarum
Female : Pesugindren pesugindren
Pechai thaandi vandhu pesugindren
Ullirundhae ullam pesugindren
பாடகர் : சைத்ரா அம்பாடிபுடி
இசையமைப்பாளர் : ஜிப்ரான்
பெண் : பேசுகின்றேன் பேசுகின்றேன்
 பேச்சை தாண்டி வந்து பேசுகின்றேன்
 ஓசையெல்லாம் வேஷம் என்றே
 உள்ளிருந்தே உள்ளம் பேசுகின்றேன்
பெண் : வாழ்கின்ற நேரத்தை
 வாழ்கின்ற நேரத்தில்
 வாழ்கின்ற நேர்மை தான்
 வாழ்க்கை ஆகும்
பெண் : தூரத்தில் காண்கின்ற
 மேகத்தின் பிரமாண்டம்
 மழையாகி விழும் போது
 துணையாய் மாறும்
பெண் : பேசுகின்றேன் பேசுகின்றேன்
 பேச்சை தாண்டி வந்து பேசுகின்றேன்
 உள்ளிருந்தே உள்ளம் பேசுகின்றேன்
பெண் : தனக்கென பிடித்த ஒன்றை
 சலனத்தில் தவற விட்டு
 பழங்கதை புழுதியிலே
 ஏன் இந்த மோதல்
பெண் : இருப்பதை ரசித்து கொண்டு
 கிடைப்பதில் உயர்வு கொண்டு
 மகிழ்ச்சியில் திளைத்திருந்தால்
 தீராதே காதல்
பெண் : உன்னோடு வாழ்ந்தாலும்
 அலைகளின் நீர் ஆற்றும்
 நான் காணும் எல்லாமே
 உன்னையே சேரும்
 மாட்டாத காற்றுக்கு
 என் கனவுகள் தூண்டில்
 எந்நாளும் ஏன் இந்த கோமாளி தேடல்
பெண் : அட முயலாமை
 பகையாச்சு உலகமே
 சலனமே
 பதுமை கூட மரணமே
பெண் : பேசுகின்றேன் பேசுகின்றேன்
 பேச்சை தாண்டி வந்து பேசுகின்றேன்
 ஓசையெல்லாம் வேஷம் என்றே
 உள்ளிருந்தே உள்ளம் பேசுகின்றேன்
பெண் : வாழ்கின்ற நேரத்தை
 வாழ்கின்ற நேரத்தில்
 வாழ்கின்ற நேர்மை தான்
 வாழ்க்கை ஆகும்
பெண் : தூரத்தில் காண்கின்ற
 மேகத்தின் பிரமாண்டம்
 மழையாகி விழும் போது
 துணையாய் மாறும்
பெண் : பேசுகின்றேன் பேசுகின்றேன்
 பேச்சை தாண்டி வந்து பேசுகின்றேன்
 உள்ளிருந்தே உள்ளம் பேசுகின்றேன்


