Vinnukku Meladai Song Lyrics is a track from Naanal Tamil Film– 1965, Starring R. Muthuraman, Major Sundararajan, Srikanth, C. K. Nagesh, K. Vijayan, K. R. Vijaya and Sowkar Janaki. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music was composed by V. Kumar. Lyrics works are penned by Suradha.

Singers : T. M. Soundarajan and P. Susheela

Music Director : V. Kumar

Lyricist : Suradha

Male : Vinnukku melaadai paruva mazhai megam
Veenaikku mel aadai narambugalin koottam
Female : Kannukku mel aadai kakkum iru imaigal
Kanavukku mel aadai thodarndhu varum thookkam

Male : Vinnukku melaadai paruva mazhai megam

Female : Mannukku mel aadai
Male : Mmmm.. mannukku mel aadai ra ra ra
Mannukku mel aadai marathin nizhal aagum
Female : Haiyae
Mannukku mel aadai vanna mai iruttu
Manadhirkku mel aadai
Male : Valarndhu varum ninaivu

Male : Pathukku mel aadai
Female : Pathukku mel aadai… aa…aa…aa…
Male : Ahaa
Female : Aa..aa..aa..aa
Male : Niruthu..raagam paadatha
Bathilai sollu
Female : Pathukku mel aadai
Male : Theriyalaiya
Mmm sollattumaa
Pathukku melaadai pathinondraeyaagum
Pakkathil nee irundhaal
Pala kadhai uruvaagum

Male : Vinnukku melaadai paruva mazhai megam
Veenaikku mel aadai narambugalin koottam

Female : Kaalathin adaiyaalam paruvangalaeyaagum
Kaadhalargal nadathuvadhu kann serdhal aagum
Kaadhalargal nadathuvadhu kann serdhal aagum
Male : Idhu varaiyil pudhu ulagam
Naam kandathillai
Edhu varaiyil sendraalum
Ellai idharkkillai

Both : Vinnukku melaadai paruva mazhai megam
Veenaikku mel aadai narambugalin koottam
Hmmm mmm mmm mmm hmm mm mmm mm

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : வி. குமார்

பாடல் ஆசிரியர் : சுரதா

ஆண் : விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம்
வீணைக்கு மேலாடை நரம்புகளின் கூட்டம்
பெண் : கண்ணுக்கு மேலாடை காக்கும் இரு இமைகள்
கனவுக்கு மேலாடை தொடர்ந்து வரும் தூக்கம்

ஆண் : விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம்

பெண் : மண்ணுக்கு மேலாடை
ஆண் : ம் ம் ம் ..மண்ணுக்கு மேலாடை ரா ரா ரா
மண்ணுக்கு மேலாடை மரத்தின் நிழலாகும்
பெண் : ஹையே
மண்ணுக்கு மேலாடை வண்ண மையிருட்டு
மனதிற்கு மேலாடை
ஆண் : வளர்ந்து வரும் நினைவு

ஆண் : பத்துக்கு மேலாடை
பெண் : பத்துக்கு மேலாடை..ஆ ஆ ஆ ஆ ஆ
ஆண் : ஆஹா
பெண் : ஆ ஆ ஆ ஆ
ஆண் : நிறுத்து..ராகம் பாடாதே..
பதிலைச் சொல்லு
பெண் : பத்துக்கு மேலாடை
ஆண் : தெரியலையா?
ம் சொல்லட்டுமா?
பத்துக்கு மேலாடை பதினொன்றேயாகும்
பக்கத்தில் நீ இருந்தால்
பல கதை உருவாகும்

ஆண் : விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம்
வீணைக்கு மேலாடை நரம்புகளின் கூட்டம்

பெண் : காலத்தின் அடையாளம் பருவங்களேயாகும்
காதலர்கள் நடத்துவது கண் சேர்தல் ஆகும்
காதலர்கள் நடத்துவது கண் சேர்தல் ஆகும்
ஆண் : இது வரையில் புது உலகம்
நாம் கண்டதுமில்லை
எது வரையில் சென்றாலும்
எல்லை இதற்கில்லை

இருவர் : விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம்
வீணைக்கு மேலாடை நரம்புகளின் கூட்டம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here