Singers : Hariharan and Sujatha Mohan
Music by : Vidyasagar
Yaaroo…nee
Pinju nilava
Panju silaiya
Nenjin alaiyaa
Yaaroo… nee
Pillai kadhira
Vellai irava
Veyil mazhaiya
Pala nooru mutkal konda
Meenaai naanum vaazhnthu vanthen
Un thoondil ennum otrai mullil
Indro maatik konden
En muthathil un meesaiyai
Sumakindra aan naan
Male : En nenjilae un kaadhalai
Sumakindra thaai naan
Yaaroo…nee
Pinju nilava
Panju silaiya
Nenjin alaiyaa
Yaaroo… nee
Pillai kadhira
Vellai irava
Veyil mazhaiya
……………………….
Panirendu Male : Uyir aavom
Female : Pathinettu Male : Mei Aavom
Female : Azhagaana thaai thamizhil
Idhazhodu Female : Kuril aavom
Male : Iravodu Female : Nedil aavom
Male : Pazhagaadha vaarthayinil
Naan kattum selayil
Orr moolayil
Nee theenda
Udal engum ratham oodathae
Un paarvai ambugal
Orr nembukol
Nee enthan
Ulagathai puratti podathae
Hmm.. thaen surakkum
Poo udalai
Thithikkum viralaal thee mootu
Yaaroo…nee
Pinju nilava…pinju nilava…
Panju silaiya…panju silaiya
Nenjin alaiyaa…nenjin alaiyaa
……………………………….
Idai moolai Female : Azhagaaga
Male : Padipoma Female : Medhuvaaga
Male : Oru kaadhal noolagathil
Oru vaanam Male : Kudaiyaaga
Female : Adharkullae Male : Mazhaiyaaga
Female : Nanaivoma neer kayitril
En kaadhal kavithaigal
Oru puthagam
Adhan melae
Azhagaana attai padam nee thaan
Nee thoongum arayilae
Un arugilae
Poo pookkum
Azhagaana kutti chedi naan thaan
Un kungumam
En vervayil
Sembulathail neer aagatho
Yaaroo…nee
Pinju nilava
Panju silaiya
Nenjin alaiyaa
Yaaroo… nee
Pillai kadhira
Vellai irava
Veyil mazhaiya
பாடகி : சுஜாதா மோகன்
பாடகர் : ஹரிஹரன்
இசையமைப்பாளர் : வித்யாசாகர்
ஆண் : யாரோ நீ பிஞ்சு
நிலவா பஞ்சு சிலையா
நெஞ்சின் அலையா
பெண் : யாரோ நீ
பிள்ளை கதிரா
வெள்ளை இரவா
வெயில் மழையா
ஆண் : பல நூறு முட்கள்
கொண்ட மீனாய் நானும்
வாழ்ந்து வந்தேன் உன்
தூண்டில் என்னும் ஒற்றை
முள்ளில் இன்றோ மாட்டி
கொண்டேன்
பெண் : என் முத்தத்தில்
உன் மீசையை சுமக்கின்ற
ஆண் நான்
ஆண் : என் நெஞ்சிலே
உன் காதலை சுமக்கின்ற
தாய் நான்
ஆண் : யாரோ நீ பிஞ்சு
நிலவா பஞ்சு சிலையா
நெஞ்சின் அலையா
பெண் : யாரோ நீ
பிள்ளை கதிரா
வெள்ளை இரவா
வெயில் மழையா
குழு : ................................
பெண் : பன்னிரெண்டு
ஆண் : உயிர் ஆவோம்
பெண் : பதினெட்டு
ஆண் : மெய் ஆவோம்
பெண் : அழகான தாய் தமிழில்
ஆண் : இதழோடு
பெண் : குறில் ஆவோம்
ஆண் : இரவோடு
பெண் : நெடில் ஆவோம்
ஆண் : பழகாத வார்த்தையினில்
பெண் : நான் கட்டும்
சேலையில் ஊர்
மூலையில் நீ தீண்ட
உடல் எங்கும் ரத்தம்
ஓடாதே
ஆண் : உன் பார்வை
அம்புகள் ஊர் நெம்புகோல்
நீ எந்தன் உலகத்தை புரட்டி
போடாதே
பெண் : ஹ்ம்ம் தேன்
சுரக்கும் பூ உடலை
தித்திக்கும் விரலால்
தீ மூட்டு
ஆண் : யாரோ நீ பிஞ்சு
நிலவா பிஞ்சு நிலவா
பஞ்சு சிலையா பஞ்சு
சிலையா நெஞ்சின்
அலையா நெஞ்சின்
அலையா
ஆண் : .................................
ஆண் : இடை மூளை
பெண் : அழகாக
ஆண் : படிப்போமா
பெண் : மெதுவாக
ஆண் : ஒரு காதல் நூலகத்தில்
பெண் : ஒரு வானம்
ஆண் : குடையாக
பெண் : அதற்குள்ளே
ஆண் : மழையாக
பெண் : நனைவோமா
நீர் கயிற்றில்
ஆண் : என் காதல்
கவிதைகள் ஒரு புத்தகம்
அதன் மேலே அழகான
அட்டை படம் நீ தான்
பெண் : நீ தூங்கும்
அறையிலே உன்
அருகிலே பூ பூக்கும்
அழகான குட்டி செடி
நான் தான்
ஆண் : உன் குங்குமம்
என் வேர்வையில்
செம்புலத்தில் நீர்
ஆகாதோ
ஆண் : யாரோ நீ பிஞ்சு
நிலவா பஞ்சு சிலையா
நெஞ்சின் அலையா
பெண் : யாரோ நீ பிள்ளை
கதிரா வெள்ளை இரவா
வெயில் மழையா