காக்கும் தெய்வம் இயேசு இருக்க
கலக்கம் என் மனமே ? கண்ணீர் ஏன் மனமே ?
1. இதுவரை உன்னை நடத்தின தேவன்
இனியும் நடத்திச் செல்வார்
எபிநேசர் அவர்தானே
2. சிலுவை சுமந்தால் சுபாவம் மாறும்
தெரிந்துகொள் மனமே
சீடன் அவன் தானே
3. பாடுகள் சகித்தால் பரமனின் வருகையில்
கூட சென்றிடலாம்
பாடி மகிழ்ந்திடலாம்
4. காண்கின்ற உலகம் நமது இல்லை
காணாத பரலோகம் தான்
நமது குடியிருப்பு