நானே வழி நானே சத்தியம்
நானே ஜீவன் மகனே(மகளே)-உனக்கு
என்னாலன்றி உனக்கு விடுதலை இல்லை
என்னாலன்றி உனக்கு நிம்மதி இல்லை
1. நான் தருவேன் உனக்கு சமாதானம்
நான் தருவேன் உனக்கு சந்தோஷம்
கலங்காதே என் மகனே(மகளே)
கண்மணி போல் உன்னைக் காத்திடுவேன்
2. உனக்காக சிலுவையில் நான் மரித்தேன்
உனக்காக திருஇரத்தம் நான் சிந்தினேன்
என் மகனே(மகளே) வருவாயா
இதயத்தில் இடம் தருவாயா
3. உனக்காகவே நான் ஜீவிக்கின்றேன்
உன் உள்ளத்தில் வாழ துடிக்கின்றேன்
வருவாயா என் மகனே (மகளே)
இதயத்திலே இடம் தருவாயா
4. நீ நம்பும் மனிதர் கைவிடலாம்
ஆனால் நான் ஒருபோதும் கைவிடமாட்டேன்
கலங்காதே என் மகனே (மகளே)
கண்மணிபோல உன்னைக் காத்திடுவேன்
(பின்வருமாறும் பாடல்)
நீரே வழி நீரே சத்தியம்
நீரே ஜீவன் இயேசையா
உம்மாலன்றி எனக்கு விடுதலை இல்லை
உம்மாலன்றி எனக்கு நிம்மதி இல்லை
1. நான் நம்பும் மனிதர் கைவிடலாம்
ஆனால் நீர் ஒருபோதும் கைவிடமாட்டீர் – நீரே
2. எனக்காகவே ஜீவிக்கின்றீர்
என் உள்ளத்தில் தங்கி நடத்துகிறீர் – நீரே