நானும் என் வீட்டாரும் உம்மையே நேசிப்போம்
உமக்காய் ஓடுவோம்
உந்தன் நாமம் சொல்லுவோம்
1. கைவிடா தெய்வமே கருணையின் சிகரமே
மெய்யான தீபமே என்வாழ்வின் பாக்கியமே
முழந்தாழ்படியிட்டு
முழுவதும் தருகிறேன் – நான்
2. எபிநேசர் எபிநேசர் இதுவரை உதவினீர்
யேகோவா ஈரே எல்லாம் பார்த்துக் கொள்வீர்;
3. யேகோவாஷம்மா கூடவே இருக்கிறீர்
யேகோவா ஷாலோம் சமாதானம் தருகிறிர்
4. பரிசுத்தர் பரிசுத்தர் பரலோக ராஜாவே
எப்போதும் இருப்பவரே இனிமேல் வருபவரே