நம்பிக்கைக்கு உரியவரே

May 3, 2024 1 views

📢 Advertisement Spot

Position: Before_content

Recommended: 336x280 / 300x250

Add your Google AdSense code in
Appearance → Customize → Ads

நம்பிக்கைக்கு உரியவரே
நம்பி வந்தேன் உம் சமூகம்
நம்புகிறேன் உம் வசனம் – (2)

1. சொந்த ஆற்றலை நம்பவில்லை
தந்தை உம்மையே சார்ந்து விட்டேன் – (2)
வாக்குத்தத்தம் செய்தவரே
வாழ்க்கையெல்லாம் உம் வார்த்தை தானே – (2)
பாதைக்கு தீபம் பேதைக்கு வெளிச்சம் உந்தன் வசனமே
ஆற்றல் மிக்கது ஜீவன் உள்ளது உந்தன் அருள்வாக்க

2. உம்மை நம்புகின்ற மனிதர்களை
உமது அன்பு என்றும் சூழ்ந்து கொள்ளும் (2)
உள்ளமெல்லாம் மகிழுதையா
உம் வசனம் நம்புவதால் – (2)
பாதைக்கு தீபம்…

3. தீமை அனைத்தையும் விட்டு விலகி
உமக்கு அஞ்சி நான் நடந்து கொண்டால் (2)
எலும்புகள் உரம் பெறும்
என்உடலும் நலம் பெறும் – (2)

4. புயலின் நடுவிலே பக்தன் பவுல்
வார்த்தை வந்ததால் திடன் கொண்டான் – (2)
கைதியாக கப்பல் ஏறி
கப்டனாக செயல் பட்டான் – (2)

5. வார்த்தை நம்பியதால் வலைகள் வீசி
திரளாய் பேதுரு மீன் பிடித்தார்
உம் வலையில் பிடிபட்டார்
தலைவனாக செயல்பட்டார்

📢 Advertisement Spot

Position: After_content

Recommended: 336x280 / 300x250

Add your Google AdSense code in
Appearance → Customize → Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *