கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்
பண்டிகைகள் நாம் கொண்டாடுவோம் – (2)
எக்காளம் ஊதி ஏழு நாட்களும்
யெஹோவா தேவனைக் கொண்டாடுவோம் – (2)
1. பலிகள் செலுத்தி பரிசுத்த சமூகத்தில்
பாடி கொண்டாடுவோம் – (2)
தீயவன் நடுவில் வருவதில்லை – (2)
கர்த்தரோ ஜெயம் எடுத்தார் – நம்
அகமகிழ்வோம் அக்களிப்போம்
ஆனந்த சத்தமிடுவோம் – (2)
2. நல்லவர் கர்த்தர் கிருபை உள்ளவர்
என்று நாம் உயர்த்திடுவோம் – (2)
கர்த்தரின் மகிமை மேகம்போல – (2)
இறங்கட்டும் இந்நாளிலே – (2)
3. அசைக்க முடியா கூடாரம் ஆவோம்
அமைதியின் இல்லம் ஆவோம் – (2)
நோயாளி என்று சொல்வதில்லை – (2)
குற்றங்கள் நீங்கியது – நம்
4. இஸ்ரவேல் ஜனத்துக்கு தேவன் தந்த
பிரமாணம் இதுதானே
எகிப்து தேசம் விட்டு புறப்படும்போது
கட்டளையாய் கொடுத்தார்
5. பழைய புளித்த மாவை அகற்றி
தூக்கி எறிந்திடுவோம்
துர்க்குணம் பொல்லாப்பு தவிர்த்திடுவோம்
அசுத்தம் அகற்றிடுவோம்
6. எல்லாம் முடிந்தது என்று இரட்சகர்
முழங்கினார் சிலுவையிலே
சாவுக்கு அதிபதி சாத்தானை
சாவாலே வென்றுவிட்டார்