முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன்
உன்னதமானவரே
அதிசயங்களெல்லாம் – உம்
எடுத்துரைப்பேன் அதிசயமானவரே – (2)
உன்னதமானவரே
என் உறைவிடம் நீர்தானே – (2) என்
உயர்த்துகிறேன் வாழ்த்துகிறேன்
வணங்குகிறேன் உம்மை போற்றுகிறேன் – (2)
1. ஒடுக்கப்படுவோருக்கு அடைக்கலமே
நெருக்கடி வேளையில் புகலிடமே – (2)
நெருக்கடி வேளையில் புகலிடமே – (2)
2. நாடித் தேடி வரும் மனிதர்களை
தகப்பன் கைவிடுவதேயில்லை
ஒருபோதும் கைவிடுவதேயில்லை
3. எழுந்தருளும் என் ஆண்டவரே
எதிரி கை ஓங்கவிடாதேயும் – (2)
எதிரியின் கை ஓங்கவிடாதேயும் – (2)