மறக்கப்படுவதில்லை

May 13, 2024 1 views

📢 Advertisement Spot

Position: Before_content

Recommended: 336x280 / 300x250

Add your Google AdSense code in
Appearance → Customize → Ads

மறக்கப்படுவதில்லை நீ
என்னால் மறக்கப்படுவதில்லை – (2)
கலங்காதே என் மகனே (மகளே)
கைவிட நான் மனிதனல்ல – (2)

1. தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும்
நான் உன்னை மறப்பதில்லை – 2
என் கண்முன்னே நீதானே
உன்னை நான் உருவாக்கினேன் – (2) – கலங்காதே

2. உள்ளங்கையிலே பொறித்து வைத்துள்ளேன்
எதிர்கால பயம் வேண்டாம் – (2)
உன் ஏக்கமெல்லாம் ஈடேறும்
கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேறும் – (2)

3. மலைகள் குன்றுகள் விலகிப் போகலாம்
விலகாது என் கிருபை – (2)
விலை கொடுத்து வாங்கி உள்ளேன் – உன்னை
எனக்கே நீ சொந்தம் – (2)

4. ஏசேக்கு சித்னா முடிந்து போனது
ரெகோபோத் தொடங்கிவிட்டது – (2)
நீ பலுகி பெருகிடுவாய்
நீ குறுகி போவதில்லை – (2)

(பினவருமாறு பாடலாம்)

மறக்கப்படுவதில்லை நான்
உம்மால் மறக்கப்படுவதில்லை – (2)
கலக்கமில்ல கவலையில்ல
கைவிட நீர் மனிதனல்ல – (2)

1. தாய் மறந்தாலும்
தந்தை வெறுத்தாலும்
நீர் என்னை மறப்பதில்லை – (2)
உம் கண்முன்னே நான்தானே
என்னை நீர் உறுவாக்கினீர் – கலக்கமில்ல

📢 Advertisement Spot

Position: After_content

Recommended: 336x280 / 300x250

Add your Google AdSense code in
Appearance → Customize → Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *