மிகுந்த ஆனந்த சந்தோஷம்
என் கர்த்தர் என்னோடே இருப்பதால் – (2)
குறையில்லையே குறையில்லையே
என் கர்த்தர் என் மேய்ப்பர்- (2) – மிகுந்த ஆனந்த
1. ஆத்துமா தேற்றுகிறார்
புதுபெலன் தருகின்றார் – (2)
அவர் நாமத்தினிமித்தம் நீதீயின் பாதையில்
நித்தம் நடத்துகிறார் – (2)
2. எதிரிகள் கண்முன்னே
விருந்து படைக்கின்றார் – (2)
புது எண்ணெய் அபிஷேகம் என் தலைமேல்
நிரம்பியது என் பாத்திரம் – (2)
3. ஜீவனுள்ள நாட்களெல்லாம்
கிருபை என்னைத் தொடரும் – (2)
நன்மையும் தயவும் நாளெல்லாம் தொடரும்
உயிருள்ள நாட்களெல்லாம் – அவர் -(2)
4. புல்லுள்ள இடங்களிலே
இளைப்பாறச் செய்கின்றார்- (2)
அமர்ந்த தண்ணீர்கள் அருகினிலே
அனுதினம் நடத்துகின்றார் – (2)
5. இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான்
நடக்க நேர்ந்தாலும் – (2)
தகப்பன் என்னோடு இருப்பதனால்
தடுமாற்றம் எனக்கில்லையே – (2)