என்னை காண்பவரே

May 14, 2024 1 views

📢 Advertisement Spot

Position: Before_content

Recommended: 336x280 / 300x250

Add your Google AdSense code in
Appearance → Customize → Ads

என்னை காண்பவரே தினம் காப்பவரே – (2)
ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர்
சுற்றி சுற்றி சூழ்ந்திக்கின்றீர் – (2)
நான் அமர்வதும் நான் எழுவதும் – (2)
நன்றாய் நீர் அறிந்திக்கின்றீர் – (2)  – என்னை

1. எண்ணங்கள் ஏக்கங்கள் எல்லாம்
எல்லாமே அறிந்திக்கின்றீர் – (2)
நடந்தாலும் படுத்தாலும்
அப்பா நீர் அறிந்திக்கின்றீர் – (2)
நன்றி ராஜா இயேசு ராஜா – (2)    – என்னை

2. முன்னும் பின்னும் நெருக்கி நெருக்கி
சுற்றி என்னை சூழ்ந்திக்கின்றீர் – (2)
உம் திரு கரத்தால் தினமும்
என்னை பற்றி பிடித்திருக்கின்டீர்
நன்றி ராஜா இயேசு ராஜா – (2) – என்னை

3. கருவை உம் கண்கள் கண்டன
மறைவாய் வளர்வதை கவனித்தீரே – என்
அதிசயமாய் பிரமிக்கத்தக்க
பக்குவமாய் உருவாக்கினீர்
நன்றி ராஜா இயேசு ராஜா – (2) – என்னை

📢 Advertisement Spot

Position: After_content

Recommended: 336x280 / 300x250

Add your Google AdSense code in
Appearance → Customize → Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *