காருண்யம் என்னும் கேடயத்தால் காத்துக்கொள்கின்றீர்
கர்த்தாவே நீதிமானை ஆசிர்வதிக்கின்றீர்
எதிர்கால பயம் இல்லையே
நீர் எனக்குள் இருப்பதால் – (2)
எதை குறித்தும் கலக்கம் இல்ல
எனக்குள்ளே இருப்பதனால் – (2)
1. நம்பும் மனிதர் சந்தோஷமாய்
மகிழ்வுடன் பாடுவார்கள்- உம்மை – (2)
அவர்களை நீர் காப்பாற்றுவீர்
அனுதினமும் கைவிடாமல் – (2) – எதிர்கால
2. தெரிந்துகொண்டீர் உமக்கென்று
அதை நான் அறிந்துகொண்டேன் – (2)
நீதியுள்ள பலி செலுத்தி
உம்மையே நான் சார்ந்துக்கொண்டேன் – (2) – எதிர்கால
3. உலகம் தருகின்ற மகிழ்வை விட
மேலான மகிழ்ச்சி நீரே – (2)
சமாதானத்தால் நிரப்புகிறீர்
சுகம் தந்து நடத்துகிறீர் – (2) – எதிர்கால