என் உதடு உம்மை துதிக்கும்
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
உம் சமுகம் மேலானது
உயிரினும் மேலானது
1. நீர் எனக்கு துணையாய் இருப்பதால்
உம் நிழலில் அகமகிழ்கின்றேன் – (2)
இறுதிவரை உறுதியுடன்
உம்மையே பற்றிக்கொண்டேன்
தாங்குதையா உமது கரம்
2. என் தகப்பன் நீர்தானையா
தேடுகிறேன் அதிகமதிகமாய் – (2)
ஜீவன் தரும் தேவநிதி வற்றாத நீரூற்று
உம்மில் நான் தாகம் கொண்டேன்
3. அறுசுவை உணவு உண்பதுபோல்
திருப்தி தினம் அடைகின்றேன் – (2)
ஆனந்த களிப்புள்ள
உதடுகளால் துதிக்கின்றேன்
ஆனந்தம் ஆனந்தமே