புதிது புதிது உந்தன் இரக்கம்
காலைதோறும் புதிது
ஒவ்வொரு நாளும் புதிது – (2)
1. முடிவு இல்லாதது
உந்தன் மனதுருக்கம் – (2)
விலகி போகாதது
உந்தன் மாகிருபை – (2)
விலகாத கிருபை மாறாத அன்பு
(என்) கர்த்தர் நல்லவர் – (4)
உம் கிருபை என்றுமுள்ளது – (2)
2. கர்த்தரே என் சுதந்தரம்
என்று நான் சொல்லுவேன் – (2)
நீரே என் உரிமைச் சொத்து
உம்மையே நம்பியுள்ளேன் – (2)
3. தேடும் அனைவருக்கும்
நன்மைகள் செய்பவரே – (2)
நம்பி நான் காத்திருக்கின்றேன்
எழுப்புதல் காணும் வரை – (2)