நிறைந்து நிறைந்து நிரப்பிடுவேன்‌

May 14, 2024 2 views

📢 Advertisement Spot

Position: Before_content

Recommended: 336x280 / 300x250

Add your Google AdSense code in
Appearance → Customize → Ads

நிறைந்து நிறைந்து நிரப்பிடுவேன்‌
பெற்ற ஊழியம்‌ நிறைவேற்றுவேன்‌
ஆவியினால்‌ வார்த்தையினால்‌
அனுதினமும்‌ நிரம்பிடுவேன்‌ – (2)

1. எங்கும்‌ வசனம்‌ பரவியது
ஏழு பேர்‌ ஆவியால்‌ நிரம்பியதால்‌
சீடர்கள்‌ தொகையும்‌ பெருகியது
கீழ்ப்படிந்தார்கள்‌ மதக்குருக்கள்‌

2. ஸ்தேவான்‌ செய்தார்‌ அதிசயங்கள்‌
தேவ ஆவியால்‌ நிரம்பினதால்‌
திரளான மக்கள்‌ திரும்பினார்கள்‌
பர்னபா ஆவியால்‌ நிரம்பியதால்‌

3. பார்வை அடைந்தார்‌ பவுல்‌ அன்று
பரிசுத்த ஆவியால்‌ நிரம்பியதால்‌
போஜனம்‌ செய்து பெலன்‌ அடைந்தார்‌
தாமதமின்றி பிரசங்கம்‌ செய்தார்‌

4. இயேசுவாலன்றி எவராலும்‌
பாவ மன்னிப்பு இல்லவே இல்லை
துணிவுடன்‌ பேதுரு தலைவர்கள்‌ முன்‌
தைரியமாக அறிக்கை செய்தான்‌

 

📢 Advertisement Spot

Position: After_content

Recommended: 336x280 / 300x250

Add your Google AdSense code in
Appearance → Customize → Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *