ஆத்துமாவே கர்த்தரையே நோக்கி

May 14, 2024 1 views

📢 Advertisement Spot

Position: Before_content

Recommended: 336x280 / 300x250

Add your Google AdSense code in
Appearance → Customize → Ads

ஆத்துமாவே கர்த்தரையே
நோக்கி அமர்ந்திரு – (2)
நான் நம்புவது அவராலே (கர்த்தராலே)
வருமே வந்திடுமே – (2) – ஆத்துமாவே

1. விட்டுவிடாதே நம்பிக்கையை
வெகுமதி உண்டு…
விசுவாசத்தால் உலகத்தையே
வெல்வது நீதான் – (2)
உனக்குள் வாழ்பவர் உலகை ஆள்பவர் – (2)

2. உன்னதமான கர்த்தர் கரத்தின்
மறைவில் வாழ்கின்றோம்…
சர்வ வல்லவர் நிழலில் தினம்
வாசம் செய்கின்றோம் – (2)
வாதை அணுகாது
தீங்கு நேரிடாது – (2) – நான் நம்புவது

3. பாழாக்கும் கொள்ளை நோய்
மேற்கொள்ளாமல்…
பாதுகாத்து பயம் நீக்கி
ஜெயம் தருகின்றார் – (2)
சிறகின் நிழலிலே
மூடி மறைக்கின்றார் – (2) – நான் நம்புவது

4.கர்த்தர் நமது அடைக்கலமும்
புகலிடமானார்…
நம்பியிருக்கும் நம் தகப்பன்
என்று சொல்லுவோம் – (2)
சோதனை ஜெயிப்போம்
சாதனை படைப்போம் – (2) – நான் நம்புவது

5. நமது தேவன் என்றென்றைக்கும்
சதாகாலமும்….
இறுதிவரை வழி நடத்தும்
தந்தை அல்லவா – (2)
இரக்கம் உள்ளவர்
நம் இதயம் ஆள்பவர் – (2) – நான் நம்புவது

📢 Advertisement Spot

Position: After_content

Recommended: 336x280 / 300x250

Add your Google AdSense code in
Appearance → Customize → Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *