ஆனந்த மகிழ்ச்சி அப்பா சமூகத்தில்
எப்போதும் இருக்கையிலே
நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்?
ஏன், ஏன் நீ புலம்புகிறாய்? – (2)
1. கர்த்தரை நம்பும் ஒருவன் மேலும்
குற்றம் சுமராது – (2)
காத்திடுவார் உயர்த்திடுவார்
காத்து நடத்திடுவார் – (2)
காத்து நடத்திடுவார் – என்னை – (2)
2. தெரிந்துக் கொண்டாரே தாசன் நான்தான்
சிநேகிதனும் நான்தான் – (2)
அழைத்த தெய்வம் ஆகாதவன் என்று
தள்ளி விட மாட்டார் – (2)
தள்ளி விடமாட்டார் – ஒரு நாளும் – (2)
3. கைகள் நீட்டு கோலை உயர்த்து
கடலைப் பிரித்துவிடு – (2)
காய்ந்த தரையில் நடந்துப் போவாய்
எதிரி காண மாட்டாய் – (2)
வியாதி காண மாட்டாய் – இனி நீ – (2)