என் உள் உறுப்புகள் உண்டாக்கியவர் நீர்தானே
தாயின் கருவில் உருத் தந்தவர் நீர்தானே
வியத்தகு முறையில் என்னைப் படைத்தீரே
நன்றி நவில்கின்றேன்
நன்றி உமக்கு நன்றி – (2) – அப்பா
1. அமர்வதையும் எழுவதையும்
அப்பா நீர் அறிந்திருக்கின்றீர்
எண்ணங்களை என் ஏக்கங்களை – என் – (2)
எல்லாமே அறிந்திருக்கின்றீர் – அப்பா
2. உம்மை விட்டு மறைவாக
எங்கே நான் ஓட முடியும்
உம் சமூகம் இல்லாமலே
எங்கே வாழ முடியும் – அப்பா
3. உம்மை வருத்தும் காரியங்கள்
இல்லாமல் அகற்றி விடும்
நித்தியமான உம் பாதையில்
நித்தமும் நடத்துமையா