எங்கள் வாழ்நாள் எல்லாம் களிகூர்ந்து மகிழ்ந்திட
காலையிலே உம் கிருபையினால் திருப்தியாக்குமையா
1. தீங்கு மேற்கொண்ட நாட்களுக்கும்
துன்பம் கண்ட வருடத்திற்கும் – (2)
சரியாய் இன்று மகிழச்செய்து
சந்தோஷத்தாலே நிரப்புகிறீர் – (2)
நீர் தானே நீர் தானே
என் தஞ்சம் நீர் தானே
நீர் தானே நீர் தானே
அடைக்கலம் நீர் தானே
என் தஞ்சம் நீர் தானே
2. புகலிடம் நீரே பூமியிலே
அடைக்கலம் தஞ்சம் நீர் தானே – (2)
எனது காப்பாளர் நீர் தானே
இறுதி வரைக்கும் நீர் தானே – (2)
3. உலகமே உருவாக்கப்படும் முன்னே
மழைகள் குன்றுகள் தோன்றும் முன்னே – (2)
எப்போதும் இருந்தவர் நீர் தானே
என்றும் இருப்பவர் நீர் தானே – (2)
4. செய்யும் செயல்கள் செம்மைப்படுத்தும்
செயல்கள் அனைத்திலும் வெற்றி தாரும் – (2)
அற்புத அடையாளம் காணச் செய்யும்
ஆதி திருச்சபை தோன்ற செய்யும் – (2)