எண்ணி எண்ணிப் பார்

May 13, 2024 1 views

📢 Advertisement Spot

Position: Before_content

Recommended: 336x280 / 300x250

Add your Google AdSense code in
Appearance → Customize → Ads

எண்ணி எண்ணிப் பார் எண்ணி பார்
எபிநேசர் செய்த நன்மைகளை – (2)
நன்றி நன்றி நன்றி
கோடி கோடி நன்றி
பலிகள் செலுத்திடுவோம் – (2)

1. தண்டிக்கப்பட்டார் நாம் மன்னிப்படைய
நீதிமான் ஆக்கினாரே – (2)
நொறுக்கப்பட்டார் நாம் மீட்படைய
நித்திய ஜீவன் தந்தார் – (2) – நன்றி

2. காயப்பட்டார் நாம் சுகமாக
நோய்கள் நீங்கியதே – (2)
சுமந்து கொண்டார் நம் பாடுகள்
சுகமானோம் தழும்புகளால் – (2)

3. சாபமானார் நம் சாபம் நீங்க
மீட்டாரே சாபத்தினின்று
ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள்
பெற்றுக் கொண்டோம் சிலுவையினால் – (2)

4. ஏழ்மையானார் சிலுவையிலே
செல்வந்தனாய் நாம் வாழ
சாவை ஏற்றார் நாம் ஜீவன் பெற
முடிவில்லா வாழ்வு தந்தார் – (2)

📢 Advertisement Spot

Position: After_content

Recommended: 336x280 / 300x250

Add your Google AdSense code in
Appearance → Customize → Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *