மகா மகா பெரியது

May 14, 2024 1 views

📢 Advertisement Spot

Position: Before_content

Recommended: 336x280 / 300x250

Add your Google AdSense code in
Appearance → Customize → Ads

மகா மகா பெரியது உம் இரக்கம்
ஒவ்வொரு நாளும் புதியது உம் கிருபை
தேற்றிடும் கிருபை
உயிர்ப்பிக்கும் கிருபை
விலகாத மாறாத கிருபை

1. மிகக் கொடிய வேதனையில்
இடுக்கண்கள் மத்தியில்
விழுந்து விட்டேன் உம் கரத்தில் – (2)
கொள்ளைநோய் விலகனும்
ஜனங்கள் வாழனும்
உம் நாமம் உயரனுமே – (4)
உம் இரக்கம் உம் தயவு அளவிட முடியாதைய்யா – (2)

2. பெலவீனங்களைக் குறித்து
பரிதவிக்கும் மிகப்பெரிய
பிரதான ஆசாரியரே – (2)
ஏற்ற வேளை உதவி செய்யும்
கிருபையை நான் நம்பியே
கிருபாசனம் வந்திருக்கிறேன் – (4)

3. கிழக்கு மேற்கு உள்ள தூரம்
குற்றங்கள் அகற்றுகின்ற
கிருபையுள்ள நல்ல தகப்பனே – (2)
பூலோகம் பரலோகம்
எவ்வளவு உயர்ந்ததோ
அவ்வளவு கிருபை உயர்ந்தது. – (4)

4. திருப்பாதம் காத்திருந்து
மன்றாடும் பிள்ளைகள் மேல்
மனதுருகும் நல்ல தகப்பனே – (2)
பஞ்சத்திலே பசியாற்ற
நோயிலிருந்து காப்பாற்ற
நோக்கமாய் இருப்பவரே – (4)

📢 Advertisement Spot

Position: After_content

Recommended: 336x280 / 300x250

Add your Google AdSense code in
Appearance → Customize → Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *