முன்னோர்கள் உம் மீது

May 13, 2024 1 views

📢 Advertisement Spot

Position: Before_content

Recommended: 336x280 / 300x250

Add your Google AdSense code in
Appearance → Customize → Ads

முன்னோர்கள் உம் மீது நம்பிக்கை வைத்தார்கள்
நம்பியதால் விடுவித்தீர் – (2)
வேண்டினார்கள் கூப்பிட்டார்கள் விடுவிக்கப் பட்டார்கள் (முகம்) வெட்கப்பட்டுப் போகவில்லை
ஏமாற்றம் அடையவில்லை – (2)

1. கர்த்தர் கொடுத்த வாக்குறுதியை
நிறைவேற்ற வல்லவர் என்று – (2)
தயங்காமல் நம்பினதால்
ஆபிரகாம் தகப்பனானான் – (2)
அறிக்கை செய்வோம் ஜெயம் எடுப்போம் வாக்குறுதி பிடித்துக்கொண்டு – (2) (முன்னோர்கள்)

2. சிறையிருப்பை திருப்புவேன் என்று
கர்த்தர் சொன்ன வாக்குறுதியை – (2)
பிடித்துக்கொண்டு தானியேல் அன்று
ஜெபித்து ஜெயம் எடுத்தான் – (2) (அறிக்கை)

3. தேசத்திற்கு திரும்பி போ நீ
நன்மை செய்வேன் என்று சொன்னாரே – (2)
அந்த திருவார்த்தையை பிடித்துக்கொண்டு
ஜேக்கப் ஜெயம் எடுத்தான் – (2) (அறிக்கை)

📢 Advertisement Spot

Position: After_content

Recommended: 336x280 / 300x250

Add your Google AdSense code in
Appearance → Customize → Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *