நாளைய தினத்தைக் குறித்து பயமில்லை
நாதன் இயேசு எல்லாம் பார்த்துக் கொள்வார்
1. ஆண்டவர் எனது வெளிச்சமும் மீட்புமானார்
எதற்கும் பயப்படேன்
அவரே எனது வாழ்வின் பெலனானார்
யாருக்கும் அஞ்சிடேன் – அல்லேலூயா
2. கேடு வரும் நாளில் கூடாரமறைவினிலே
ஒளித்து வைத்திடுவார்
கன்மலையின் மேல் உயர்த்தி நிறுத்திடுவார்
கலக்கம் எனக்கில்லை – அல்லேலூயா
3. தகப்பனும் தாயும் என்னை கைவிட்டாலும்
கர்த்தர் சேர்த்துக் கொள்வார்
கர்த்தருக்காய் நான்தினமும் காத்திருப்பேன்
புது பெலன் பெற்றிடுவேன் – அல்லேலூயா