பாடும் போது என் உதடு
கெம்பீரித்து மகிழும்
நீர் மீட்டுக் கொண்ட என் ஆன்மா
அக்களித்து அகமகிழும் – (2)
1. நான் பாடுவேன் நான் துதிப்பேன்
இரவு பகல் எந்நேரமும் – (2)
உம் துதியால் என் நாவு
நிறைந்து இருப்பதாக – (2)
நாள்தோறும் உம்மை துதிப்பேன்
நம்பிக்கையோடு துதிப்பேன் – (2) – பாடும்போது
2. எப்போதும் நான் தேடும்
கன்மலை நீர் தானே – (2)
புகலிடமும் காப்பகமும்
எல்லாம் நீர்தானே – (2) – நாள்தோறும்
3. (நான்) கருவறையில் இருக்கும் போது
கர்த்தர் என்னை பராமரித்தீர் – (2)
(ஒரு) குறைவின்றி குழந்தையாக
வெளியே நீர் கொண்டுவந்தீர் – (2) – நாள்தோறும்
4. (என்) இளமை முதல் இதுவரையில்
நீரே என் எதிர்காலம் – (2)
நீர் தானே என் தலைவர்
நோக்கமும் நம்பிக்கையும் – (2) – நாள்தோறும்
5. (நான்) முதிர்வயது ஆனாலும்
தள்ளிவிடாதவரே – (2)
(என்) பெலன் குன்றி போகும் போது
கைவிடாதவரே – (2) – நாள்தோறும்