சுகம் தரவேண்டும் யேகோவா ரஃப்பா – இன்று
இயேசு நாமத்தினால் இயேசு இரத்தத்தினால்
தூய ஆவியின் வல்லமையால் – (2)
1. நிமிரமுடியாத மகளை அன்று
நிமிர்ந்து துதிக்கச் செய்தீர்
நிரந்தாரமாய் குணமாக்கி
உமக்காய் வாழச் செய்தீர் – சுகம்
2. தொழுநோய்கள் சுகமானதே
உம் திருக்கரம் தொட்டதால்
கடும் வியாதிகள் விலகியதே
உமது வல்லமையால்
3. பிறவியிலே முடவர் அன்று
உம் நாமத்தில் நடந்தாரே
பெரும்பாடுள்ள பெண் அன்று
சாட்சி பகர்ந்தாளே