வாய்க்கால்கள் ஓரத்திலே
நடப்பட்ட மரம் நானே
என் வேர்கள் தண்ணீருக்குள்
இலையுதிரா மரம் நான் – (2)
1. செய்வதெல்லாம் வாய்க்கும்
வெற்றி மேல் வெற்றி காண்பேன் – (2)
பசுமை எப்போதுமே
தப்பாமல் கனி கொடுப்பே – (2)
எப்போதும் பசுமை
தப்பாமல் கனிகள் – (2)
2. கர்த்தரின் திரு வேதத்தில்
இன்பம் தினம் காண்பேன் – (2)
இரவு பகல் எப்போதும் (நான்)
தியானம் செய்திடுவேன் – (2) – எப்போதும்
3. நீதிமான் செல்லும் வழிகள்
கர்த்தரோ தினம் பார்க்கிறார் – (2)
துன்மார்க்கர் பாதையெல்லாம்
அழிவில்தான் முடியும் – (2) -எப்போதும்
4. துன்மார்க்கர் ஆலோசனை
கேளாமல் வாழ்ந்திருப்பேன் – (2)
பொல்லாரின் சொற்கள்படி
நடவாமல் தினம் வாழ்வேன் – (2) – எப்போதும்