வெப்பமிகு நாட்களில்

May 13, 2024 1 views

📢 Advertisement Spot

Position: Before_content

Recommended: 336x280 / 300x250

Add your Google AdSense code in
Appearance → Customize → Ads

வெப்பமிகு நாட்களில் அச்சமில்லையே
வறட்சி காலத்தில் பயம் இல்லையே – (2)
என் வேர்கள் தண்ணீருக்குள்
இலையுதிரா மரம் நான் – (2)
எப்போதும் பசுமை நானே
தப்பாமல் கனி கொடுப்பேன் – (2)

நம்பியுள்ளேன் கர்த்தரையே
உறுதியாய் பற்றிக் கொண்டேன் – (2)
பாக்கியவான் பாக்கியவான் – (2) – நான்
என்றென்றும் பாக்கியவான்

1. கிருபை சூழ்ந்து கொள்ளும்
பேரன்பு பின் தொடரும் – உம்
இதயம் அகமகிழும் – என்
இன்னிசை தினம் பாடும் – (2) நம்பியுள்ளேன்

2. இக்கட்டு துன்ப வேளையில்
காக்கும் தகப்பன் நீரே – (2)
பூரண சமாதானம் – உம்
தினம் தினம் இதயத்திலே – (2)

3. குருடன் பர்த்திமேயு
கூப்பிட்டான் நம்பிக்கையோடு – (2)
இயேசுவே இரங்கும் என்றான்
பார்வை பெற்று பின் தொடர்ந்தான் – (2)

4. நம்பி வந்த குஷ்டரோகியை
நலமாக்கி அனுப்பினீரே
யவீரு உம்மை நம்பியதால்
மகள் அன்று சுகம் பெற்றாள்

📢 Advertisement Spot

Position: After_content

Recommended: 336x280 / 300x250

Add your Google AdSense code in
Appearance → Customize → Ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *