விழுந்து போகாமல் தடுக்கி விழாமல்
காக்க வல்லவரே தினமும் காப்பவரே – (2)
உமக்கே உமக்கே மகிமை மாட்சிமை – (2)
1. மகிமையின் சந்நிதானத்தில்
மிகுந்த மகிழ்ச்சியுடன் – (2)
மாசற்ற மகனாக(மகளாக) நிறுத்த வல்லவரே – (2) – உமக்கே
2. அதிகாரம் வல்லமை கனமும் மகத்துவமும் – (2)
இப்போதும் எப்போதுமே
உமக்கே உரித்தாகட்டும் – (2) – உமக்கே
3. மெய் ஞானம் நீர்தானையா
ரட்சகரும் நீர்தானையா – (2)
மீட்பரும் நீர்தானையா
என் மேய்ப்பரும் நீர்தானையா – (2) – உமக்கே