Seeman Petra Song Lyrics is a track from Seeman Petra Selvangal Tamil Film– 1962, Starring M. R. Radha, K. A. Thangavelu, Devika and Pandari Bai. This song was sung by T. M. Soundarajan and the music was composed by T. R. Pappa. Lyrics works are penned by Kannadasan.

Singer : T. M. Soundarajan

Music Director : T. R. Pappa

Lyricist : Kannadasan

Male : Seemaan pettra selvangal
Seemaan pettra selvangal
Perum selvathil midhandha ullangal
Seemaan pettra selvangal
Perum selvathil midhandha ullangal
Siragai izhandhu uravai marandhu
Thigaithu nirkkum annangal
O thigaithu nirkkum annangal
Seemaan pettra selvangal

Male : Oorukku uzhaikkum maadaanaan
Than ullam theindhu odaanaan
Oorukku uzhaikkum maadaanaan
Than ullam theindhu odaanaan
Perum illai perumaiyum illai
Pichai kolam poonduvittaan
Pichai kolam poonduvittaan
Seemaan pettra selvangal

Male : Maaligai eendra manivairam
Pudhu maragadha sevvaai kodi annam
Maaligai eendra manivairam
Pudhu maragadha sevvaai kodi annam
Kolam izhandhu azhudha kanneril
Kodu vilundhadhu poongannam
Kolam izhandhu azhudha kanneril
Kodu vilundhadhu poongannam

Male : Thandhai kattiya mandabathai
Thaanum kaana ninaithirundhaal
Thandhai kattiya mandabathai
Thaanum kaana ninaithirundhaal
Kaalam avrum ena thandhai uraithaan
Kaalam vandhadhu vandhu vittaal
Kaalam avrum ena thandhai uraithaan
Kaalam vandhadhu vandhu vittaal
Seemaan pettra selvangal
Perum selvathil midhandha ullangal

Male : Manaiyaal sollil madhizhandhaan
Andha mayakkathil uravai maraithirundhaan
Manaiyaal sollil madhizhandhaan
Andha mayakkathil uravai maraithirundhaan
Mayakkam thelindhu uravai ninaindhu
Mandapam kaana oodugindraan
Mayakkam thelindhu uravai ninaindhu
Mandapam kaana oodugindraan
Seemaan pettra selvangal
Perum selvathil midhandha ullangal

Male : Oorukku thandhai katti veithaan
Indru uriyavar adhiale kudi pugundhaar
Oorukku thandhai katti veithaan
Indru uriyavar adhiale kudi pugundhaar
Yaarukku endru enna varum
Idhai yaar arivaar avan thaan varuvaan
Yaarukku endru enna varum
Idhai yaar arivaar avan thaan varuvaan

Male : Naettraiya vaazhkkai maaligaiyil
Indraiya vaazhkkai mandabathil
Naettraiya vaazhkkai maaligaiyil
Indraiya vaazhkkai mandabathil
Naalaiya vaazhkkai evvidamoo
Naalaiya vaazhkkai evvidamoo
Oru naalil mudiyum nadagamoo

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : சீமான் பெற்ற செல்வங்கள்
சீமான் பெற்ற செல்வங்கள்
பெரும் செல்வத்தில் மிதந்த உள்ளங்கள்
சீமான் பெற்ற செல்வங்கள்
பெரும் செல்வத்தில் மிதந்த உள்ளங்கள்
சிறகை இழந்து உறவை மறந்து
திகைத்து நிற்கும் அன்னங்கள்
ஓ திகைத்து நிற்கும் அன்னங்கள்
சீமான் பெற்ற செல்வங்கள்

ஆண் : ஊருக்கு உழைக்கும் மாடானான்
தன் உள்ளம் தேய்ந்து ஓடானான்
ஊருக்கு உழைக்கும் மாடானான்
தன் உள்ளம் தேய்ந்து ஓடானான்
பேரும் இல்லை பெருமையும் இல்லை
பிச்சைக் கோலம் பூண்டுவிட்டான்
பிச்சைக் கோலம் பூண்டுவிட்டான்
சீமான் பெற்ற செல்வங்கள்

ஆண் : மாளிகை ஈன்ற மணிவைரம்
புது மரகதச் செவ்வாய்க் கொடி அன்னம்
மாளிகை ஈன்ற மணிவைரம்
புது மரகதச் செவ்வாய்க் கொடி அன்னம்
கோலமிழந்து அழுத கண்ணீரில்
கோடு விழுந்தது பூங்கன்னம்
கோலமிழந்து அழுத கண்ணீரில்
கோடு விழுந்தது பூங்கன்னம்

ஆண் : தந்தை கட்டிய மண்டபத்தைத்
தானும் காண நினைத்திருந்தாள்
தந்தை கட்டிய மண்டபத்தைத்
தானும் காண நினைத்திருந்தாள்
காலம் வருமென தந்தையுரைத்தான்
காலம் வந்தது வந்து விட்டாள்
காலம் வருமென தந்தையுரைத்தான்
காலம் வந்தது வந்து விட்டாள்
சீமான் பெற்ற செல்வங்கள்
பெரும் செல்வத்தில் மிதந்த உள்ளங்கள்

ஆண் : மனையாள் சொல்லில் மதியிழந்தான்
அந்த மயக்கத்தில் உறவை மறந்திருந்தான்
மனையாள் சொல்லில் மதியிழந்தான்
அந்த மயக்கத்தில் உறவை மறந்திருந்தான்
மயக்கம் தெளிந்து உறவை நினைந்து
மண்டபம் காண ஓடுகின்றான்
மயக்கம் தெளிந்து உறவை நினைந்து
மண்டபம் காண ஓடுகின்றான்
சீமான் பெற்ற செல்வங்கள்
பெரும் செல்வத்தில் மிதந்த உள்ளங்கள்

ஆண் : ஊருக்குத் தந்தை கட்டி வைத்தான்
இன்று உரியவர் அதிலே குடி புகுந்தார்
ஊருக்குத் தந்தை கட்டி வைத்தான்
இன்று உரியவர் அதிலே குடி புகுந்தார்
யாருக்கு என்று என்ன வரும்
இதை யாரறிவார் அவன்தான் அறிவான்
யாருக்கு என்று என்ன வரும்
இதை யாரறிவார் அவன்தான் அறிவான்

ஆண் : நேற்றைய வாழ்க்கை மாளிகையில்
இன்றைய வாழ்க்கை மண்டபத்தில்
நேற்றைய வாழ்க்கை மாளிகையில்
இன்றைய வாழ்க்கை மண்டபத்தில்
நாளைய வாழ்க்கை எவ்விடமோ
நாளைய வாழ்க்கை எவ்விடமோ
ஒரு நாளில் முடியும் நாடகமோ ……..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here