Theeradha Varumaiyudan Song Lyrics is a track from Gumastha Tamil Film– 1953, Starring V. Nagayya,
Pandari Bai, B. Jayamma, P. V. Narasimha Bharathi and Others. This song was sung by B. Jayamma and the music was composed by C. N. Pandurangam. Lyrics works are penned by A. Maruthakasi.
Singer : B. Jayamma
Music by : C. N. Pandurangam
Lyrics by : A. Maruthakasi
Female : Theeraatha varumaiyudan
Poraada vanthavalae
Maaraatha thuyar theerkkum
Marunthe nee kanvalaraai
Female : Kaanaatha kaatcheyellaam
Kaanavae vanthaayo
Kanivaaga avvaipol
Kavi paada vanthaayo
Female : Theeraatha varumaiyudan
Poraada vanthavalae
Maaraatha thuyar theerkkum
Marunthe nee kanvalaraai
Female : Thavam seiyyum thanavaangal
Magalaai nee piravaathu
Thaalaatha thollaikkae
Aaalaaga piranthayae
Female : Puvi meethu kavalai yaethum
Ariyaatha kanmaniyae
Suvaiyoorum sengarumbae
Sugavaazhvin nallarumbae
Female : Theeraatha varumaiyudan
Poraada vanthavalae
Maaraatha thuyar theerkkum
Marunthe nee kanvalaraai
பாடகி : பி. ஜெயம்மா
இசையமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கம்
பாடலாசிரியர் : ஏ. மருதகாசி
பெண் : தீராத வறுமையுடன்
போராட வந்தவளே
மாறாத துயர் தீர்க்கும்
மருந்தே நீ கண்வளராய்
பெண் : காணாத காட்சியெல்லாம்
காணவே வந்தாயோ
கனிவாக அவ்வைப் போல்
கவி பாட வந்தாயோ…
பெண் : தீராத வறுமையுடன்
போராட வந்தவளே
மாறாத துயர் தீர்க்கும்
மருந்தே நீ கண்வளராய்
பெண் : தவம் செய்யும் தனவான்கள்
மகளாய் நீ பிறவாது
தாளாத தொல்லைக்கே
ஆளாகப் பிறந்தாயே
பெண் : புவி மீது கவலை ஏதும்
அறியாத கண்மணியே
சுவையூறும் செங்கரும்பே
சுகவாழ்வின் நல்லரும்பே..
பெண் : தீராத வறுமையுடன்
போராட வந்தவளே
மாறாத துயர் தீர்க்கும்
மருந்தே நீ கண்வளராய்