Singers : Naresh Iyer and Anitha Karthikeyan
Music Director : D. Imman
Lyricist : Viveka
Chorus : Noorandu vaazhga nalamaaga vaazhga
Noorandu vaazhga nalamaaga vaazhga
Male : Enakkendru paadhai kedaiyaadhu
Un viral pidithu payanam
Unai vittu uyir vaazha chonnaal
Oru nodi kooda adhigam
Male : Enakkendru paadhai kedaiyaadhu
Un viral pidithu payanam
Unai vittu uyir vaazha chonnaal
Oru nodi kooda adhigam
Male : Thaayin saayal saelai koyil
Unadhu madiyil enadhu aayul
Thaayin saayal saelai koyil
Unadhu madiyil enadhu aayul
Chorus : Noorandu vaazhga nalamaaga vaazhga
Male : Enakkendru paadhai kedaiyaadhu
Un viral pidithu payanam
Unai vittu uyir vaazha chonnaal
Oru nodi kooda adhigam
Humming : …………….
Male : Un echil paal thaane
En udalin rathamanadhe
Ulagathil undhan anbe
Kalappilla suthamaanadhu
Male : En pilaigal en kuraigal
En thadaigal en valigal
Needhaane theerthu veipaai
Unaiyindri deivam yedhu
Male : En kanavaai en ninaivaai
En uyiraai en unarvaai
Dhinam pookkum deiva malare
Vazhi kattum deepa sudare
Chorus : Noorandu vaazhga nalamaaga vaazhga
Male : Enakkendru paadhai kedaiyaadhu
Un viral pidithu payanam
Unai vittu uyir vaazha chonnaal
Oru nodi kooda adhigam
Humming : …………….
Male : Kann moodi parthaalum
Theringindra uruvam allavaa
En veettil enakkaaga
Pirandhitta thozhi allavaa
Male : En guruvaai en thunaiyaai
En nizhalai en nijamaai
Idhu pola bandham illaiye
Neeyae en anbin ellai
Male : En arivu en thelivu
En thiramai en porumai
Unnai solla vaarthaai illai
Unakkaai nee vaazhndhathillai
Chorus : Noorandu vaazhga nalamaaga vaazhga
Noorandu vaazhga nalamaaga vaazhga
Male : Enakkendru paadhai kedaiyaadhu
Un viral pidithu payanam
Unai vittu uyir vaazha chonnaal
Oru nodi kooda adhigam
Male : Thaayin saayal saelai koyil
Unadhu madiyil enadhu aayul
Chorus : Noorandu vaazhga nalamaaga vaazhga
Noorandu vaazhga nalamaaga vaazhga
பாடகர்கள் : நரேஷ் ஐயர் மற்றும் அனிதா கார்த்திகேயன்
இசை அமைப்பாளர் : டி. இமான்
பாடல் ஆசிரியர் : விவேகா
குழு : நூறாண்டு வாழ்க நலமாக வாழ்க
நூறாண்டு வாழ்க நலமாக வாழ்க
ஆண் : எனக்கென்று பாதை கிடையாது
உன் விரல் பிடித்து பயணம்
உனை விட்டு உயிர் வாழச் சொன்னால்
ஒரு நொடி கூட அதிகம்
ஆண் : எனக்கென்று பாதை கிடையாது
உன் விரல் பிடித்து பயணம்
உனை விட்டு உயிர் வாழச் சொன்னால்
ஒரு நொடி கூட அதிகம்
ஆண் : தாயின் சாயல் சேலைக் கோயில்
உனது மடியில் எனது ஆயுள்
தாயின் சாயல் சேலைக் கோயில்
உனது மடியில் எனது ஆயுள்
குழு : நூறாண்டு வாழ்க நலமாக வாழ்க
ஆண் : எனக்கென்று பாதை கிடையாது
உன் விரல் பிடித்து பயணம்
உனை விட்டு உயிர் வாழச் சொன்னால்
ஒரு நொடி கூட அதிகம்
முனங்கல் : …………….
ஆண் : உன் எச்சில் பால் தானே
என் உடலில் ரத்தமானதே
உலகத்தில் உந்தன் அன்பே
கலப்பில்லா சுத்தமானது
ஆண் : என் பிழைகள் என் குறைகள்
என் தடைகள் என் வலிகள்
நீதானே தீர்த்து வைப்பாய்
உனையன்றி தெய்வம் ஏது
ஆண் : என் கனவாய் என் நினைவாய்
என் உயிராய் என் உணர்வாய்
தினம் பூக்கும் தெய்வ மலரே
வழிக் காட்டும் தீபச் சுடரே
குழு : நூறாண்டு வாழ்க நலமாக வாழ்க
ஆண் : எனக்கென்று பாதை கிடையாது
உன் விரல் பிடித்து பயணம்
உனை விட்டு உயிர் வாழச் சொன்னால்
ஒரு நொடி கூட அதிகம்
முனங்கல் : …………….
ஆண் : கண் மூடிப் பார்த்தாலும்
தெரிகின்ற உருவமல்லவா
என் வீட்டில் எனக்காக
பிறந்திட்ட தோழி அல்லவா
ஆண் : என் குருவாய் என் துணையாய்
என் நிழலாய் என் நிஜமாய்
இது போல பந்தமில்லையே
நீயே என் அன்பின் எல்லை
ஆண் : என் அறிவு என் தெளிவு
என் திறமை என் பொறுமை
உன்னை சொல்ல வார்த்தை இல்லை
உனக்காய் நீ வாழ்ந்ததில்லை
குழு : நூறாண்டு வாழ்க நலமாக வாழ்க
நூறாண்டு வாழ்க நலமாக வாழ்க
பெண் : எனக்கென்று ஆசை கிடையாது
உன் சிரிப்பே தான் அமுதம்
உனை விட்டு உயிர் வாழச் சொன்னால்
ஒரு நொடி கூட அதிகம்
ஆண் : தாயின் சாயல் சேலைக் கோயில்
உனது மடியில் எனது ஆயுள்
குழு : நூறாண்டு வாழ்க நலமாக வாழ்க
நூறாண்டு வாழ்க நலமாக வாழ்க…..
