Female : Thirumal azhaga thirumagal thalaiva
Thiruvarul ivalukku tharavendum
Vanavil polae mariya ilamai
Marubadi ivalukku vara vendum

 nee varavendum arul tharavendum
En azhagellam ival pera vendum..

Female : Paanjaalikaaga andru thugil thandha kannaa
Ival konda kolam naan peravendum manna
Paanjaalikaaga andru thugil thandha kannaa
Ival konda kolam naan peravendum manna

Female : Andam yaavaiyum undhan kaalgalil
Alandhu nindravane
Andru undhan perinai sonna yaanaiyin
Thunbam theerthavane
Vaadum poongodikae megam pol varuga
Mangai vaazhvadharkkae anbu thaen tharuga

Female : Thirumal azhaga thirumagal thalaiva
Thiruvarul ivalukku tharavendum
Vanavil polae mariya ilamai
Marubadi ivalukku vara vendum

Female : Kallaana ondru un kaal theenda kandu
Ponnanadhendru deiva kadhai ingu undu
kallai pennena
Mannai ponnena maattrum maayavane
Ival maalai soodida
Maargam thandharul seethai naayagane

Female : Thandhai kattalaiyai thalaiyil yettravane
Endhan vaarthaigalai yerpaai raghavane

Female : Nallorgal vaazha
Perum kodiyorai kondraai
Nallorgal vaazha
Perum kodiyorai kondraai
Narasimma moorthi ennum avadharamkondaai
Narasimma moorthi ennum avadharamkondaai

Female : Annai boomiyai kombil
yettriya vadivam nee allavaa
Indha kanni poovaiyai
Vanna paavaiyai neeyum kaathidavaa
Neelam poothavane sogam theerthida vaa
Gnyalam kaathavanae sabam neekkidavaa

Female : Thirumal azhaga thirumagal thalaiva
Thiruvarul ivalukku tharavendum
Vanavil polae mariya ilamai
Marubadi ivalukku vara vendum

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : கே. பி. அறிவானந்தம்

பெண் : திருமால் அழகா திருமகள் தலைவா
திருவருள் இவளுக்கு தரவேண்டும்
வானவில் போலே மாறிய இளமை
மறுபடி இவளுக்கு வரவேண்டும்

பெண் : திருமால் அழகா திருமகள் தலைவா
திருவருள் இவளுக்கு தரவேண்டும்
வானவில் போலே மாறிய இளமை
மறுபடி இவளுக்கு வரவேண்டும்
நீ வரவேண்டும் அருள் தரவேண்டும்
என் அழகெல்லாம் இவள் பெறவேண்டும்..

பெண் : பாஞ்சாலிக்காக அன்று துகில் தந்த கண்ணா
பாஞ்சாலிக்காக அன்று துகில் தந்த கண்ணா
இவள் கொண்ட கோலம் நான் பெறவேண்டும் மன்னா
இவள் கொண்ட கோலம் நான் பெறவேண்டும் மன்னா

பெண் : அண்டம் யாவையும் உந்தன் கால்களில்
அளந்து நின்றவனே
அன்று உந்தன் பேரினை சொன்ன யானையின்
துன்பம் தீர்த்தவனே
வாடும் பூங்கொடிக்கே மேகம் போல் வருக
மங்கை வாழ்வதற்கே அன்பு தேன் தருக

பெண் : திருமால் அழகா திருமகள் தலைவா
திருவருள் இவளுக்கு தரவேண்டும்
வானவில் போலே மாறிய இளமை
மறுபடி இவளுக்கு வரவேண்டும்

பெண் : கல்லான ஒன்று உன் கால் தீண்ட கண்டு
பெண்ணானதென்று தெய்வக் கதை இங்கு உண்டு
கல்லை பெண்ணென மண்ணை
பொன்னென மாற்றும் மாயவனே
இவள் மாலை சூடிட மார்க்கம்
தந்தருள் சீதை நாயகனே

பெண் : தந்தை கட்டளையை தலயில் ஏற்றவனே
எந்தன் வார்த்தைகளை ஏற்பாய் ராகவனே

பெண் : நல்லோர்கள் வாழ
பெரும் கொடியோரைக் கொன்றாய்
நல்லோர்கள் வாழ
பெரும் கொடியோரைக் கொன்றாய்
நரசிம்ம மூர்த்தி என்னும் அவதாரம் கொண்டாய்
நரசிம்ம மூர்த்தி என்னும் அவதாரம் கொண்டாய்

பெண் : அன்னை பூமியை கொம்பில்
ஏற்றிய வடிவம் நீயல்லவா
இந்த கன்னிப் பூவையை
வண்ணப் பாவையை நீயும் காத்திடவா
நீலம் பூத்தவனே சோகம் தீர்த்திட வா
ஞாலம் காத்தவனே சாபம் நீக்கிடவா

பெண் : திருமால் அழகா திருமகள் தலைவா
திருவருள் இவளுக்கு தரவேண்டும்
வானவில் போலே மாறிய இளமை
மறுபடி இவளுக்கு வரவேண்டும்….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Oru Pere Varalaaru Song: Click Here