Singer : S. Janaki

Music by : G. K. Venkatesh

Female : Aadum alaigalil neendhi kondirunthaan
Yamunaiyile kannan
Aayar paadiyil gopiyar soola naduvinilae kannan
Pullan kulalisai meetuvathil thanai maranthan kannan
Pullan kulalisai meetuvathil thanai maranthan kannan
Poovaiyar gopiyar anbinilae thanai meimaranthan kannan
Mei maranthan kannan

Female : Odiya vellathil vegathil kannan
Aadai naluviyathu
Ovena sirithar gopiyar
Ovena sirithar gopiyar
Kannanai naanam thazhuviyathu
Naanam thazhuviyathu

Female : Karai vazhi vanthaal dhravpathi
Karai vazhi vanthaal dhravpathi
Kannan kavalaiyai paarkindral
Selai munthanaiyai oru puram eduthu
Orathai pirikindral
Devagi maindhanin maanathai kaaka
Neerinil erikindraal neerinil erikindraal

Female : Kanni dhravpathii en maanathai kaathaai
Kannan nandri sonnen
Kannan nandri sonnen
Kaalamarindhu udhaviku varuven
Nandriku nandri solven
Nandriku nandri solven

Female : Soothadi thottru vittaan
Paandava dharuman
Andha thooyavalai aattathil ilandhu vittaan
Vaathadum avaithanilae koondhal pattri
Maathavalai iluthu vandhan dhuriyan thambi

Female : Kovrava kulathalaivan dhuriyothan
Kattalai idukindran
Iyvarin munnilaiyil aval aadaiyai pari endraan
Annai thudikindral konda ivarai paarkindral
Thammai maranthavarai ivar thalai kuninthirukindrar

Female : Kanna manivanna deva deva
Hari hari hari hari endraal
Nandri solven endraai
Andha naalum iduvallavo
Indru varavidilo kanna
Innaiyor thunai undo
Kanna kanna kanna kanna

Female : Thodai meedhu vaaventra thuriyothana
Undhan thodai keeri ratham edupen
Thuchadhana undhan pachai ratham kondu
Kodhai en koonthal mudipen
Annai parasakthi aanai
Manam konda ivari meethile aanai
Anbu thunai konda mannan paranthaman
Kannanin meethil aanai aanai aanai

Female : Bharatha poril ventrathamma
Andha paandavar perum senai
Paarthipan kanaiyil vizhinthathamma
Andha kovravar kulathaanai
Beeman kathaiyil thodaiyai pilanthan
Thuriyothanan thannai
Vetri kanneer maraithu dhravpathi vel vizhiyal kannai
Vel vizhiyal kannai

Female : Paavi thuchathanan ratham eduthu
Koonthal mudikindraal
Paranthaman mugam paarthae marupadi
Nandri uraikkindraal nandri uraikkindraal
Bharatha poril vendrathamma andha paanjali saritham
Paavaiyin koonthalil minnuthamma
Andha panjaaliyin sabadham sabadham sabadham

பாடகி : எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ்

பெண் : ஆடும் அலைகளில் நீந்திக் கொண்டிருந்தான்
யமுனையிலே கண்ணன்
ஆயர் பாடியில் கோபியர் சூழ
நடுவினிலே கண்ணன்
புல்லாங் குழலிசை மீட்டுவதில் தனை
மறந்திருந்தான் கண்ணன்
புல்லாங் குழலிசை மீட்டுவதில் தனை
மறந்திருந்தான் கண்ணன்
பூவையர் கோபியர் அன்பினிலே தன்
மெய்மறந்தான் கண்ணன்….

பெண் : ஓடிய வெள்ளத்தின் வேகத்தில் கண்ணன்
ஆடை நழுவியது
ஓவென சிரித்தார் கோபியர்
ஓவென சிரித்தார் கோபியர்
கண்ணனை நாணம் தழுவியது நாணம் தழுவியது

பெண் : கரை வழி வந்தாள் திரௌபதி
கரை வழி வந்தாள் திரௌபதி
கண்ணன் கவலையை பார்க்கின்றாள்
சேலை முந்தானையை ஒரு புறம் எடுத்து
ஓரத்தைப் பிரிக்கின்றாள்
தேவகி மைந்தனின் மானத்தை காக்க
நீரினில் எறிகின்றாள்…..

பெண் : கன்னி திரௌபதி என் மானத்தை காத்தாய்
கண்ணன் நன்றி சொன்னேன்
கண்ணன் நன்றி சொன்னேன்
காலமறிந்து உதவிக்கு வருவேன்
நன்றிக்கு நன்றி சொல்வேன்
நன்றிக்கு நன்றி சொல்வேன்

பெண் : சூதாடி தோற்று விட்டான் பாண்டவ தருமன்
அந்த தூயவளை இழந்து விட்டான்
வாதாடும் அவைதனிலே கூந்தல் பற்றி
மாதவளை இழுத்து வந்தான் துரியன் தம்பி

பெண் : கௌரவ குலத்தலைவன் துரியோதன்
கட்டளை இடுகின்றான்
ஐவரின் முன்னிலையில்
அவள் ஆடையைப் பறி என்றான்
அன்னை துடிக்கின்றாள்
கொண்ட ஐவரைப் பார்க்கின்றாள்
தம்மை மறந்தவராய்
ஐவர் தலைக் குனிந்திருக்கின்றார்

பெண் : கண்ணா…….மணிவண்ணா………
தேவா……..தேவா………..
ஹரி ஹரி ஹரி ஹரி என்றாள்
நன்றி சொல்வேன் என்றாய்
அந்த நாளும் இதுவல்லவோ…..
இன்று வராவிடிலோ கண்ணா
இணையோர் துணை உண்டோ
கண்ணா கண்ணா கண்ணா கண்ணா

பெண் : தொடை மீது வாவென்ற
துரியோதனா உந்தன்
தொடைக் கீறி ரத்தம் எடுப்பேன்
துச்சாதனா உந்தன் பச்சை ரத்தம் கொண்டு
கோதை என் கூந்தல் முடிப்பேன்
அன்னை பராசக்தி ஆணை
மணம் கொண்ட ஐவரின் மீதிலே ஆணை
அன்புத் துணைக் கொண்ட கண்ணன்
பரந்தாமன் மீதிலே ஆணை ஆணை ஆணை

பெண் : பாரதப் போரில் வென்றதம்மா
அந்த பாண்டவர் பெரும் சேனை
பார்த்திபன் கணையில் வீழ்ந்ததம்மா
அந்த கௌரவர் குலத்தாணை

பெண் : பீமன் கதையில் தொடையைப் பிளந்தான்
துரியோதனன் தன்னை
வெற்றிக் கண்ணீர் மறைத்தது திரௌபதி
வேல் விழியாள் கண்ணை
வேல் விழியாள் கண்ணை

பெண் : பாவி துச்சாதனன் ரத்தம் எடுத்து
கூந்தல் முடிக்கின்றாள்
பரந்தாமன் முகம் பார்த்தே
மறுபடி நன்றி உரைக்கின்றாள்
நன்றி உரைக்கின்றாள்
பாரதப் போரில் வென்றதம்மா
அந்த பாஞ்சாலி சரிதம்
பாவையின் கூந்தலில் மின்னுதம்மா
அந்த பாஞ்சாலி சபதம்
சபதம்………சபதம்………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Badass" song lyrics from LEO: Click Here