Singer : P. Susheela

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Kannadasan

Female : Azhakkadalil neendhi vandhen
Aani muthai yendhi vandhen
Neendhi varum velaiyilae
Neera kudithen paadhiyilae

Female : Kaadhal ennum saedhi sonnen
Kaagidhathil thoodhu vitten
Aasai veippaan endrirundhen
Aadharithaan naan magizhndhen

Female : Azhakkadalil neendhi vandhen
Aani muthai yendhi vandhen
Neendhi varum velaiyilae
Neera kudithen paadhiyilae

Female : Maalaikatta kaathirundhen
Manjalaiyae paarthirundhen
Maalai katta neram illai
Naanam kettu ponadhamma

Female : Chinnamuthu sittumuthu
Vannamuthu vaasamuthu
Ennidathil meendum vara
Yaar idathil poyiuraippen

Female : Azhakkadalil neendhi vandhen
Aani muthai yendhi vandhen
Neendhi varum velaiyilae
Neera kudithen paadhiyilae

Female : Sippi idhu kettadhudhaan
Seer izhandhu ponadhu thaan
Appoludhum en manadhai
Aandavan pol avan arivaan
Aandavan pol avan arivaan

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஆழக்கடல் நீந்தி வந்தேன்
ஆணி முத்தை ஏந்தி வந்தேன்
நீந்தி வரும் வேளையிலே
நீர்க் குடித்தேன் பாதியிலே..

பெண் : காதலென்னும் சேதி சொன்னேன்
காகிதத்தில் தூதுவிட்டேன்
ஆசை வைப்பான் என்றிருந்தேன்
ஆதரித்தான் நான் மகிழ்ந்தேன்

பெண் : ஆழக்கடல் நீந்தி வந்தேன்
ஆணி முத்தை ஏந்தி வந்தேன்
நீந்தி வரும் வேளையிலே
நீர்க் குடித்தேன் பாதியிலே..

பெண் : மாலைகட்ட காத்திருந்தேன்
மஞ்சளையே பார்த்திருந்தேன்
மாலைகட்ட நேரமில்லை
நாணம் கெட்டுப் போனதம்மா

பெண் : சின்னமுத்து சிட்டுமுத்து
வண்ணமுத்து வாசமுத்து
என்னிடத்தில் மீண்டும் வர
யாரிடத்தில் போயுரைப்பேன்

பெண் : ஆழக்கடல் நீந்தி வந்தேன்
ஆணி முத்தை ஏந்தி வந்தேன்
நீந்தி வரும் வேளையிலே
நீர்க் குடித்தேன் பாதியிலே..

பெண் : சிப்பி இது கெட்டதுதான்
சீரிழந்து போனதுதான்
அப்பொழுதும் என் மனதை
ஆண்டவன்போல் அவன் அறிவான்
ஆண்டவன்போல் அவன் அறிவான்…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vettaiyan"Manasilaayo Song: Click Here