Singer : T. M. Soundarajan
Music Director : P. Aadhinarayana Rao
Lyricist : Kannadasan
Amma …..
Seiyaadha paavam soozhndhadhe
Seradha thunbam serndhadhae
Amma …..
Seiyaadha paavam soozhndhadhe
Seradha thunbam serndhadhae
Anbu vaithaal adhu thunbam
Nenjil aasai vaithaal adhu mosam
Ondrupattaal adhu paavam
Nalla uravu kondaal adhu dhrogam
Amma …..
Seiyaadha paavam soozhndhadhe
Seradha thunbam serndhadhae
Humming : ……………..
Annai maarbilae thanga malar
Adhu mannar maalgai thandha malar
Indru ezhai pol vaadudhamma
Thaai idhaya oonjalil aadudhamma
O mannargalae…
O..mannargalae
Ungal needhi engae
Manidhargalae manam engae
Mangaiyar nallaram engae
Amma …..
Seiyaadha paavam soozhndhadhe
Seradha thunbam serndhadhae
Humming : ………….
Eduthu kollavoo kaigal illai
Paal koduthu kaakavoo vazhiyum illai
Viduthu pogavoo mudiyavillai
Nenjil viluntha paasamoo kuraiyavillai
Un thaaimaiyilae
Un thaaimaiyilae
Undhan selvam valarum thalaradhae
Irul maraiyum oru naal ulagam vidiyum
Amma …..amma…amma…
Humming : ………….
பாடகர் : டி. எம். சௌந்தராஜன்
இசை அமைப்பாளர் : பி. ஆதிநாராயண ராவ்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
ஆண் : அம்மா........
செய்யாத பாவம் சூழ்ந்ததே
சேராத துன்பம் சேர்ந்ததே
அம்மா
செய்யாத பாவம் சூழ்ந்ததே
சேராத துன்பம் சேர்ந்ததே
ஆண் : அன்பு வைத்தால் அது துன்பம் நீ
ஆசை வைத்தால் அது மோசம்
ஒன்றுபட்டால் அது பாவம் நல்ல
உறவுக் கொண்டால் அது துரோகம்
ஆண் : அம்மா........
செய்யாத பாவம் சூழ்ந்ததே
சேராத துன்பம் சேர்ந்ததே
முனங்கல் : ..............
ஆண் : அன்னை மார்பிலே தங்க மலர்
அது மன்னர் மாளிகை தந்த மலர்
இன்று ஏழை போல் வாடுதம்மா
தாய் இதய ஊஞ்சலில் ஆடுதம்மா......
ஆண் : ஒ....மன்னர்களே........
ஒ......மன்னர்களே
உங்கள் நீதி எங்கே
மனிதர்கள் மனம் எங்கே
மங்கையர் நல்லறம் எங்கே......
ஆண் : அம்மா........
செய்யாத பாவம் சூழ்ந்ததே
சேராத துன்பம் சேர்ந்ததே
முனங்கல் : ..............
ஆண் : எடுத்துக் கொள்ளவோ கைகள் இல்லை
பால் கொடுத்துக் காக்கவோ வழியும் இல்லை
விடுத்து போகவோ முடியவில்லை
நெஞ்சில் விழுந்த பாசமோ குறையவில்லை
ஆண் : உன் தாய்மையிலே
உன் தாய்மையிலே
உந்தன் செல்வம் வளரும் தளராதே
இருள் மறையும் ஒருநாள் உலகம் விடியும்
ஆண் : அம்மா அம்மா அம்மா
முனங்கல் : ..............