Singers : Vani Jairam and P. Susheela

Music by : Shankar Ganesh

Female : Ammaa thaaye magamaayi
Azhuthaen thozhuthaen arul purivaayae
Ammaa thaaye magamaayi
Azhuthaen thozhuthaen arul purivaayae

Female : Madippitchai kettaen naanae
Thiru maangalyam kidaiththida thaanae
Panivarai thondriya thaenae
Sivan paadhaththil uraigindra maanae

Female : Ammaa thaaye magamaayi
Azhuthaen thozhuthaen arul purivaayae

Female : Marumagal azhutha kural
Un mani sevi ketkaatho
En thirumagan uyir pizhaikka
Un arul vanthu vaaikkaatho

Female : Marumagal azhutha kural
Un mani sevi ketkaatho
En thirumagan uyir pizhaikka
Un arul vanthu vaaikkaatho

Female : Oru magan eendraval naanendraal
Adi Iru magan eendraval neeyallavo
Oru magan eendraval naanendraal
Adi Iru magan eendraval neeyallavo
Paasangal thaaimaikku podhuvendraal
Adi enai pol neeyoru thaayallavo
Enai pol neeyoru thaayallavo

Female : Ammaa thaaye magamaayi
Azhuthaen thozhuthaen arul purivaayae

Female : Aayiram kannudaiyaal
Adi anaiththum kurudaamo
Adhil ooriru kann malaranthaal
Un karunaikku kuraivaamo

Female : Aayiram kannudaiyaal
Adi anaiththum kurudaamo
Adhil ooriru kann malaranthaal
Un karunaikku kuraivaamo

Female : Kaalanai uddhaiththa paalanai manantha
Kolamayil neeyae
Andru etti udhaiththathu mettial anintha
Un paadhanthaan thaayae

Female : Indru soodiya poovinai vaadavidaamal
Sooliniyae arulga
Naan poosiya manjalai kaayavidaamal
Pagavathiyae arulga

Female : Ammaa thaaye magamaayi
Azhuthaen thozhuthaen arul purivaayae

Female : Thiruvannaamalaiyinil
Unnaamulaiyena amarantha thayaapariyae
Thiruvaanaikkaavinil nyaana sudar vidum
Akilaandishwari

Female : Thirukuttraalam thanil kuzhal vaaimozhi ena
Uttra perum nidhiye
Nalla kodungallooril koluvil amarantha
Vadivae bagavathiyae

Female : Naamakkallil naamagiri
Thirunelveli thanil gandhimaddhi
Naattarasan kottaiyilae
Nee kannudaiya naayagi

Female : Aayiram naamam padaiththavalae
Aayiram koyil pugunthavalae
Aayiram naamam padaiththavalae
Aayiram koyil pugunthavalae

Female : Naayagan uyirai kaappatharkku
Naalum viratham irunthavalae
Naayagan uyirai kaappatharkku
Naalum viratham irunthavalae

Female : Udhikkum kadhir udhikka thadai
Vidhiththavalum pennthaan
Eman pariththa uyir variththu vinai
Madinthavalum pennthaan

Female : Theeyinidai thavam purintha
Neeyum oru pennthaan
Konda nayaganin nalam vendum
Naanumoru pennthaan

Female : Kanneerai neiyaakki nenjaththai neruppaakki
Kulamaadhu purinthaenae yaagam
Kanavan paavangal purinthaalum saabangal irunthaalum
Enai meeri theendumo naagam

Female : Naagaththin vadivaana karumaariyae
Ingu nee vanthu pozhivaayo arul maariyae
Thaayae un thiruppaatham saranaagathi
Ingu neeyindri yaezhaikku yaarthaan gathi
Yaarthaan gathi……yaarthaan gathi……

பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பெண் : அம்மா தாயே மகமாயி…
அழுதேன் தொழுதேன் அருள் புரிவாயே
அம்மா தாயே மகமாயி…
அழுதேன் தொழுதேன் அருள் புரிவாயே

பெண் : மடிப்பிச்சை கேட்டேன் நானே
திருமாங்கல்யம் கிடைத்திட தானே
பனிவரை தோன்றிய தேனே
சிவன் பாதத்தில் உறைகின்ற மானே

பெண் : அம்மா தாயே மகமாயி…
அழுதேன் தொழுதேன் அருள் புரிவாயே

பெண் : மருமகள் அழுதக் குரல்
உன் மணிச் செவிக் கேட்காதோ
என் திருமகன் உயிர் பிழைக்க
உன் அருள் வந்து வாய்க்காதோ

பெண் : மருமகள் அழுதக் குரல்
உன் மணிச் செவிக் கேட்காதோ
என் திருமகன் உயிர் பிழைக்க
உன் அருள் வந்து வாய்க்காதோ

பெண் : ஒரு மகன் ஈன்றவள் நானென்றால்
அடி இரு மகன் ஈன்றவள் நீயல்லவோ
ஒரு மகன் ஈன்றவள் நானென்றால்
அடி இரு மகன் ஈன்றவள் நீயல்லவோ
பாசங்கள் தாய்மைக்கு பொதுவென்றால்
அடி எனைப் போல் நீயொரு தாயல்லவோ
எனைப் போல் நீயொரு தாயல்லவோ

பெண் : அம்மா தாயே மகமாயி…
அழுதேன் தொழுதேன் அருள் புரிவாயே

பெண் : ஆயிரம் கண்ணுடையாள்
அடி அனைத்தும் குருடாமோ
அதில் ஓரிரு கண் மலர்ந்தால்
உன் கருணைக்கு குறைவாமோ

பெண் : ஆயிரம் கண்ணுடையாள்
அடி அனைத்தும் குருடாமோ
அதில் ஓரிரு கண் மலர்ந்தால்
உன் கருணைக்கு குறைவாமோ

பெண் : காலனை உதைத்த பாலனை மணந்த
கோலமயில் நீயே
அன்று எட்டி உதைத்தது மெட்டிகள் அணிந்த
உன் பாதந்தான் தாயே

பெண் : இன்று சூடிய பூவினை வாடவிடாமல்
சூலினியே அருள்க
நான் பூசிய மஞ்சளை காயவிடாமல்
பகவதியே அருள்க…….

பெண் : அம்மா தாயே மகமாயி…
அழுதேன் தொழுதேன் அருள் புரிவாயே

பெண் : திருவண்ணாமலையினில்
உண்ணாமுலையென அமர்ந்த தயாபரியே
திருவானைக்காவினில் ஞானச் சுடர் விடும்
அகிலாண்டீஸ்வரியே

பெண் : திருக்குற்றாலம் தனில் குழல் வாய்மொழி என
உற்ற பெரும் நிதியே
நல்ல கொடுங்கல்லூரில் கொலுவில் அமர்ந்த
வடிவே பகவதியே

பெண் : நாமக்கல்லில் நாமகிரி
திருநெல்வேலி தனில் காந்திமதி
நாட்டரசன் கோட்டையிலே
நீ கண்ணுடைய நாயகி

பெண் : ஆயிரம் நாமம் படைத்தவளே
ஆயிரம் கோயில் புகுந்தவளே
ஆயிரம் நாமம் படைத்தவளே
ஆயிரம் கோயில் புகுந்தவளே

பெண் : நாயகன் உயிரைக் காப்பதற்கு
நாளும் விரதம் இருந்தவளே
நாயகன் உயிரைக் காப்பதற்கு
நாளும் விரதம் இருந்தவளே

பெண் : உதிக்கும் கதிர் உதிக்க தடை
விதித்தவளும் பெண்தான்
எமன் பறித்த உயிர் வரித்து வினை
முடித்தவளும் பெண்தான்

பெண் : தீயினிடை தவம் புரிந்த
நீயும் ஒரு பெண்தான்
கொண்ட நாயகனின் நலம் வேண்டும்
நானுமொரு பெண்தான்

பெண் : கண்ணீரை நெய்யாக்கி நெஞ்சத்தை நெருப்பாக்கி
குலமாது புரிந்தேனே யாகம்
கணவன் பாவங்கள் புரிந்தாலும் சாபங்கள் இருந்தாலும்
எனை மீறி தீண்டுமோ நாகம்

பெண் : நாகத்தின் வடிவான கருமாரியே
இங்கு நீ வந்து பொழிவாயோ அருள் மாரியே
தாயே உன் திருப்பாதம் சரணாகதி
இங்கு நீயின்றி ஏழைக்கு யார்தான் கதி…..
யார்தான் கதி….. யார்தான் கதி……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


Check New "Ponni Nadhi" song lyrics from Ponniyin Selvan : Click Here