Singer : Nayana Nair

Music by : Mickey J. Meyer

Female : Amudhai pola kidaithaai
Mayakkam kodi koduthaai
Neeillaamal ennaagiren
Udaindhu pona idhayam
Irundu pona ulagam
Neeyillaamal ingae
Naan ennaagirenoo…..

Chorus : Hoo ooo……
Hoo ooo……
Hoo ooo……
Hoo ooo……

Female : Thirandhen en kannai
Thirandhen en vaazhvai
Thirandhen en nenjai
Thirandhenae unnai….

Female : Marandhen en inbam
Marandhen en kanneer
Marandhen en moochai
Marandhenaa unnai….

Female : Thavarena arindhaalum
Unai virumbiya nenjam
Alaipaayudhu innum
Nilaiyillaamal…

Female : Yaavum nee endren
Nee en vaazhvendren
Yen pirindhenoo
Ketkaadhae…..

Female : Ulagil poi ulagil
Vishamaedhu… amudhaedhu…
Yedhum naanariyen
Neeyae meiyaai

Female : Valigal pagirndhaai
Piragen pirindhaai
Enai nee pirindhum
Piriyaamalae…

Female : Amudham pondra nanjum
Udaindhu pona nenjum
Irudhiyil enna enjum
En ullae nee sendru
Paarppaayaa konjam..

பாடகி : நயன நாயர்

இசையமைப்பாளர் : மிக்கி ஜே. மேயர்

பெண் : அமுதைப் போல கிடைத்தாய்
மயக்கம் கோடி கொடுத்தாய்
நீயில்லாமல் என்னாகிறேன்
உடைந்து போன இதயம்
இருண்டு போன உலகம்
நீயில்லாமல் இங்கே
நான் என்னாகிறேனோ…..

குழு : ஹோ ஓஒ…..
ஹோ ஓஒ…..
ஹோ ஓஒ…..
ஹோ ஓஒ…..

பெண் : திறந்தேன் என் கண்ணை
திறந்தேன் என் வாழ்வை
திறந்தேன் என் நெஞ்சை
திறந்தேனே உன்னை….

பெண் : மறந்தேன் என் இன்பம்
மறந்தேன் என் கண்ணீர்
மறந்தேன் என் மூச்சை
மறந்தேனா உன்னை…..

பெண் : தவறென அறிந்தாலும்
உனை விரும்பிய நெஞ்சம்
அலைபாயுது இன்னும்
நிலையில்லாமல்…..

பெண் : யாவும் நீ என்றேன்
நீ என் வாழ்வென்றேன்
ஏன் பிரிந்தேனோ
கேட்காதே….

பெண் : உலகில் பொய் உலகில்
விஷமேது…..அமுதேது….
ஏதும் நானறியேன்
நீயே மெய்யாய்

பெண் : வலிகள் பகிர்ந்தாய்
பிறகேன் பிரிந்தாய்
எனை நீ பிரிந்தும்
பிரியாமலே….

பெண் : அமுதம் போன்ற நஞ்சும்
உடைந்து போன நெஞ்சும்
இறுதியில் என்ன எஞ்சும்
என் உள்ளே நீ சென்று
பார்ப்பாயா கொஞ்சம்….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here