Singer : Vani Jairam
Music by : K. Vijaya Baskar
Lyrics by : Kannadasan
Female : Anbenum sudaraal erinthathu vilakku
Adhanaal erinthathu innoru vilakku
Anbenum sudaraal erinthathu vilakku
Adhanaal erinthathu innoru vilakku
Female : Siriyathu jothi periyathu dheepam
Irandum eriyattum idhil enna paavam
Oru kai thaangum maru kai meettum
Iru kai veenaiyil pirappathu raagam
Female : Thalai oru madiyil kaal oru madiyil
Thirumaal arivaar thirumagal thaagam
Thalai oru madiyil kaal oru madiyil
Thirumaal arivaar thirumagal thaagam
Female : Anbenum sudaraal erinthathu vilakku
Adhanaal erinthathu innoru vilakku
Female : Valathu kai unakku idathu kai enakku
Valli dheivaanai pottathu kanakku
Valathu kann paarththaal idathu kann paarkkum
Manitharukkellaam irandu kann edharkku
Female : Idhuvarai sonnathu ulagaththin vazhakku
Innoru ragasiyam idhayaththil irukku
Idhuvarai sonnathu ulagaththin vazhakku
Innoru ragasiyam idhayaththil irukku
Female : Anbenum sudaraal erinthathu vilakku
Adhanaal erinthathu innoru vilakku
பாடகி : வாணி ஜெய்ராம்
இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : அன்பெனும் சுடரால் எரிந்தது விளக்கு
 அதனால் எரிந்தது இன்னொரு விளக்கு
 அன்பெனும் சுடரால் எரிந்தது விளக்கு
 அதனால் எரிந்தது இன்னொரு விளக்கு
பெண் : சிறியது ஜோதி பெரியது தீபம்
 இரண்டும் எரியட்டும் இதில் என்ன பாவம்
 ஒரு கை தாங்கும் மறு கை மீட்டும்
 இரு கை வீணையில் பிறப்பது ராகம்
பெண் : தலை ஒரு மடியில் கால் ஒரு மடியில்
 திருமால் அறிவார் திருமகள் தாகம்
 தலை ஒரு மடியில் கால் ஒரு மடியில்
 திருமால் அறிவார் திருமகள் தாகம்
பெண் : அன்பெனும் சுடரால் எரிந்தது விளக்கு
 அதனால் எரிந்தது இன்னொரு விளக்கு
பெண் : வலது கை உனக்கு இடது கை எனக்கு
 வள்ளி தெய்வானை போட்டது கணக்கு
 வலது கண் பார்த்தால் இடது கண் பார்க்கும்
 மனிதருக்கெல்லாம் இரண்டு கண் எதற்கு
பெண் : இதுவரை சொன்னது உலகத்தின் வழக்கு
 இன்னொரு ரகசியம் இதயத்தில் இருக்கு
 இதுவரை சொன்னது உலகத்தின் வழக்கு
 இன்னொரு ரகசியம் இதயத்தில் இருக்கு
பெண் : அன்பெனும் சுடரால் எரிந்தது விளக்கு
 அதனால் எரிந்தது இன்னொரு விளக்கு



