Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Hamsalekha

Chorus : ……………….

Male : Antha anpulla annakkili thannai tharumaa
Ennai santhikka aasaipattu jannal vittu varumaa
Female : Intha anpulla annakkili thannai tharumaa
Unnai santhikka aasaipattu jannal vittu varumaa

Female : Munbu santhiththaal pinbu kandiththaal
Netru thandiththaal indru sinthithaal

Male : Antha anpulla annakkili thannai tharumaa
Ennai santhikka aasaipattu jannal vittu varumaa

Female : Oru paarvaiyil vvidhai vanthathu
Maru parvaiyil mazhai vanthathu
Thulir vittathu nenjam
Pen manam kulivittathu konjam

Female : Koondhalil pookkalai olithaen
Chinna kobaththil kadhalai maraiththaen
Kadhalum vaanamum ondruthaan
Adhai kaigalil moodida ninaiththaen

Female : Oomaigal naadakaththil naanoru paaththiramaa
Naadagam mudinthuvittaal mounamum saaththiyamaa
Endru sinthiththaen naalai santhippaen
Intha anbulla annakkili thannai tharumae
Unnai santhikka aasaipattu jannal vittu varumae

Chorus : ……………….

Male : Muththakkalai karpikkavum
Moga kadhai oppikkavum nenjenbathu illai
Kanmani nesam pol illai

Male : Kadhalil naanindru veezhnthaen
Unthan kangalil kangalai izhanthen
Paarvaikku aaradi irunthaen
Unnai paarthathum oradi kurainthaen

Male : Punagai oviyamae povathu needhiyillai
Nee enai neengivittaal vaazhkkaiyil paadhiyillai
Vanthu nillammaa vaarththai sollammaa

Male : Antha anpulla annakkili thannai tharumaa
Ennai santhikka aasaipattu jannal vittu varumaa

Female : Munbu santhiththaal pinbu kandiththaal
Netru thandiththaal indru sinthithaal

Chorus : Laalaa lallal laa….
Male : Laalaa lallal laa….
Chorus : Laalaa lallal laa….

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : ஹம்சலேகா

குழு : ………………………

ஆண் : அந்த அன்புள்ள அன்னக்கிளி தன்னை தருமா
என்னை சந்திக்க ஆசைப்பட்டு ஜன்னல் விட்டு வருமா
பெண் : இந்த அன்புள்ள அன்னக்கிளி தன்னை தருமா
உன்னை சந்திக்க ஆசைப்பட்டு ஜன்னல் விட்டு வருமா

பெண் : முன்பு சந்தித்தாள் பின்பு கண்டித்தாள்
நேற்று தண்டித்தாள் இன்று சிந்தித்தாள்

ஆண் : அந்த அன்புள்ள அன்னக்கிளி தன்னை தருமா
என்னை சந்திக்க ஆசைப்பட்டு ஜன்னல் விட்டு வருமா

பெண் : ஒரு பார்வையில் விதை வந்தது
மறுப் பார்வையில் மழை வந்தது
துளிர் விட்டது நெஞ்சம்
பெண் மனம் குளிர்விட்டது கொஞ்சம்

பெண் : கூந்தலில் பூக்களை ஒளித்தேன்
சின்னக் கோபத்தில் காதலை மறைத்தேன்
காதலும் வானமும் ஒன்றுதான்
அதை கைகளில் மூடிட நினைத்தேன்

பெண் : ஊமைகள் நாடகத்தில் நானொரு பாத்திரமா
நாடகம் முடிந்துவிட்டால் மௌனமும் சாத்தியமா
என்று சிந்தித்தேன் நாளை சந்திப்பேன்
இந்த அன்புள்ள அன்னக்கிளி தன்னை தருமே
உன்னை சந்திக்க ஆசைப்பட்டு ஜன்னல் விட்டு வருமே

குழு : ………………………

ஆண் : முத்தக்கலை கற்ப்பிக்கவும்
மோகக் கதை ஒப்பிக்கவும் நெஞ்சென்பது இல்லை
கண்மணி நேசம் போல் இல்லை

ஆண் : காதலில் நானின்று வீழ்ந்தேன்
உந்தன் கண்களில் கண்களை இழந்தேன்
பார்வைக்கு ஆறடி இருந்தேன்
உன்னை பார்த்ததும் ஓரடி குறைந்தேன்

ஆண் : புன்னகை ஓவியமே போவது நீதியில்லை
நீ எனை நீங்கிவிட்டால் வாழ்க்கையில் பாதியில்லை
வந்து நில்லம்மா வார்த்தை சொல்லம்மா

ஆண் : அந்த அன்புள்ள அன்னக்கிளி தன்னை தருமா
என்னை சந்திக்க ஆசைப்பட்டு ஜன்னல் விட்டு வருமா

பெண் : முன்பு சந்தித்தாள் பின்பு கண்டித்தாள்
நேற்று தண்டித்தாள் இன்று மன்னித்தாள்…..

குழு : லாலா லல்லல் லா……
ஆண் : லாலா லல்லல் லா……
குழு : லாலா லல்லல் லா……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


Check New "Badass" song lyrics from LEO: Click Here