Singers : T, M. Soundararajan and S. Janaki

Music by : Ilayaraja

Male : Anthappurathil oru maharaani
Aval anbu karathil oru maharaajan
Anthappurathil oru maharaani
Aval anbu karathil oru maharaajan
Kangal sivandhirukka aval paarthaal
Kaaman thiruchabaikku vazhi kettaal

Female : Saamanthi pookkal malarndhana
Male : Iru sandhana thaergal asaindhana

Female : Saamanthi pookkal malarndhana
Male : Iru sandhana thaergal asaindhana
Female : Paavai idhazh irandum kovai
Male : Amudha rasam thevai
Female : Yena azhaikkum paarvaiyo

Female : Anthappurathil oru maharaajan
Avan anbu karathil oru maharaani
Aasai kanindhu vara avan paarthaan
Annam thalai kunindhu nilam paarthaal

Male : {Sangu vanna kazhuthukku
Thanga maalai
Aval sangamathin sugathirkku
Andhi maalai} (2)

Female : Kungumathin idhazh sinnam
Kanda kaalai
Avan kollai kolla thudithadhu
Enna paarvai

Male : Adhu paarvai alla
Baasai endru kooradi endraal

Female : Anthappurathil oru maharaajan
Avan anbu karathil oru maharaani
Male : Kangal sivandhirukka aval paarthaal
Kaaman thiruchabaikku vazhi kettaal

Male : {Muthu chippi pirandhadhu
Vinnai paarthu
Female : Mazhai muthu vandhu vizhundhadhu
Vannam poothu} (2)

Male : Pitham ondru valarndhadhu
Mutham kettu
Female : Avan nenjil vandhu pirandhidum
Thottil paarthu

Male & Female :
Andhi then podhigai thendral vandhu
Aariro paadum

Female : Anthappurathil oru maharaajan
Avan anbu karathil oru maharaani
Male : Kangal sivandhirukka aval paarthaal
Kaaman thiruchabaikku vazhi kettaal

Female : Aaraariro…
Male : Aaraari raaraariro…
Female : Raariraaro aaraariro…
Male : Aaraariro…
Female : Aaraariro…
Male : Aaraariro…
Female : Aaraariro…

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : அந்தப்புரத்தில் ஒரு மகராணி
அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராஜன்
அந்தப்புரத்தில் ஒரு மகராணி
அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராஜன்

ஆண் : கண்கள் சிவந்திருக்க
அவள் பார்த்தாள்
காமன் திருச்சபைக்கு
வழி கேட்டாள்

பெண் : சாமந்தி பூக்கள் மலர்ந்தன
ஆண் : இரு சந்தன தேர்கள் அசைந்தன

பெண் : சாமந்தி பூக்கள் மலர்ந்தன
ஆண் : இரு சந்தன தேர்கள் அசைந்தன

பெண் : பாவை இதழ் இரண்டும் கோவை
ஆண் : அமுத ரசம் தேவை
பெண் : என அழைக்கும் பார்வையோ

பெண் : அந்தப்புரத்தில் ஒரு மகராஜன்
அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராணி
ஆசை கனிந்துவர அவன் பார்த்தான்
அன்னம் தலை குனிந்து
நிலம் பார்த்தாள்

ஆண் : {சங்கு வண்ண கழுத்துக்கு
தங்கமாலை அவள்
சங்கமத்தின் சுகத்துக்கு
அந்திமாலை} (2)

பெண் : குங்குமத்தின் இதழ்
சின்னம் தந்த காலை
அவன் கொள்ளை கொள்ள
துடித்தது என்ன பார்வை

ஆண் : அது பார்வையல்ல
பாஷையென்று கூறடி என்றாள்

பெண் : அந்தப்புரத்தில் ஒரு மகராஜன்
அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராணி

ஆண் : கண்கள் சிவந்திருக்க
அவள் பார்த்தாள்
காமன் திருச்சபைக்கு
வழி கேட்டாள்

ஆண் : முத்துச்சிப்பி திறந்தது
விண்ணை பார்த்து
பெண் : மழை முத்து வந்து
விழுந்தது வண்ணம் பூத்து

ஆண் : முத்துச்சிப்பி திறந்தது
விண்ணை பார்த்து
பெண் : மழை முத்து வந்து
விழுந்தது வண்ணம் பூத்து

ஆண் : பித்தம் ஒன்று வளர்ந்தது
முத்தம் கேட்டு
பெண் : அவன் நெஞ்சில் வந்து
பிறந்திடும் தொட்டில் பாட்டு

ஆண் மற்றும் பெண் :
அங்கே தென் பொதிகை
தென்றல் வந்து ஆடிடும் பாடும்

பெண் : அந்தப்புரத்தில் ஒரு மகராஜன்
அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராணி

ஆண் : கண்கள் சிவந்திருக்க
அவள் பார்த்தாள்
காமன் திருச்சபைக்கு
வழி கேட்டாள்

பெண் : ஆராரிரோ…
ஆண் : ஆராரி…ஆராராரிரோ
பெண் : ஆரிராரோ ஆராரிரோ
ஆண் : ஆராரிரோ…
பெண் : ஆராரிரோ…
ஆண் : ஆராரிரோ….
பெண் : ஆராரிரோ…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


Check New "Badass" song lyrics from LEO: Click Here