Singers : L. R. Eswari and P. Madhuri

Music by : M. S. Vishwanathan

Female : Chaera chozha paandi mannar
Aanda thamizh naadu

Chorus : Aanda thamizh naadu

Female : Draavidathai veru yaarum
Aalvadhenbadhaedhu

Chorus : Aalvadhenbadhaedhu

Female : Thaenai pondra thamizhirukka
Vaeru baashai edharkku

Chorus : Vaeru baashai edharkku

Both : Dhesiyam endra peril
Yaeippadhungal kanakku
Chorus : Dhesiyam endra peril
Yaeippadhungal kanakku

Female : Thamizh naadu Chorus : Thamizharukkae..(3)

Chorus : Andhra dhesam aandhrarukkae

Female : Krishna dhevarudan raama raayaremai
Aanda dhesamidhu raamaiyaa

Chorus : Raamaiyaa raamaiyaa

Female : Goratha dhaesamenum paeril neengaladhai
Saerthu vaithadhenna beemaiyaa

Chorus : Beemaiyaa beemaiyaa

Female : Andhra dhesamum naangalum ondraai
Vaazhvadhu murai thaano

Chorus : Vaazhvadhu murai thaano

Female : Adippom parippom pirippom emakku
Vendum telungaanaa

Chorus : Vendum telungaanaa

Chorus : Andhra dhesam aandharukkae…(3)

Both : Mahaaraashtram namadhae

Female : Sivaaji aanda em maraati dhesathil
Virodhi varalaamaa

Chorus : Virodhi varalaamaa

Female : Vidaamal thurathu poraattam nadathu
Ezhuvom oru saenaa

Chorus : Ezhuvom oru saenaa

Female : Kattupattu sumandhadhu podhum

Chorus : Podhum

Female : Mattu pattu bayandhadhu podhum

Chorus : Podhum

Female : Maarai thattu veeram kottu

Chorus : Valga porattam

Female : Panjaab Chorus : Namadhae

Female : Panja nadhigal ondraaga odum
Paanjaala dhaesamadi
Pagaivarai edhirthu pattaalam saera
Anjaadha dhaesamadi

Chorus : Aahu aahu uaahu aahu aahu
Uaahu aahu aahu uaahu
Hoinaa hoinaa hoinaa

Female : Chandigaar ennum podhu nagar engal
Thalai nagar aagumadi
Thara maattom adhai vida maattom

Both : Yena thunindhu sabadham seiyadi

Female : Hariyum sivanum yena
Pirindhu pirindhu naam
Vaazhvom hariyaanaa
Andha thalai nagaram engal thalai nagaram

Both : Punajaab peralaamaa

Both : Vangaalam namadhae…
Karnaadagam namadhae…
Keralam namadhae…
Sudhandhira kaashmir sindhaabaad…

Chorus : Hmm mm mm mmm mm mm
Hmm mm mm mm mm mm mm mm…

Female : Indhiya dhesathu selvangalae
Inaiyaadhirukkum ullangalae
Sindhiya ratham podhaadho
Dhesam naasam aagaadho
Angae telungaanaa
Appappaa ingae hariyaanaa
Naduvil pala saenaa ingae
Nadappadhu sari thaanaa

Chorus : Hmm mm mm mmm ….
Hmm mm mm mm mm ….

Female : Adimaiyaaga vaazhndha kaalam
Marandhu ponadhaa
Anji anji kidandha kaalam
Mmarandhu ponadhaa
Kodumai theernthu vaazha vandhum
Urimai illaiyae
Oru kulathai pola vaazhvadhendra
Porumai illaiyae

Female : Maanilangal thorum enna pirivinai
Naam marandhu vittom annal gaandhi oruvanai
Ottrumai kaanbom adhil vetriyum kaanbom
Chorus : Ottrumai kaanbom adhil vetriyum kaanbom

Female : Ondru pattaal undu vaazhvu
Nammidam ottrumai neenginaal
Anaivarkkum thaazhvu
Vandhae maatharam enbom
Namm bharatha thaaiyai vanangu enbom

Chorus : Vandhae maatharam enbom
Namm bharatha thaaiyai vanangu enbom
Vandhae maatharam enbom
Namm bharatha thaaiyai vanangu enbom

பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் பி. மாதுரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : சேர சோழ பாண்டி மன்னர்
ஆண்ட தமிழ்நாடு

குழு : ஆண்ட தமிழ்நாடு

பெண் : திராவிடத்தை வேறு யாரும்
ஆள்வதென்பதேது

குழு : ஆள்வதென்பதேது

பெண் : தேனைப் போன்ற தமிழ் இருக்க
வேறு பாஷை எதற்கு

குழு : வேறு பாஷை எதற்கு

இருவர் : தேசீயம் என்ற பேரில்
ஏய்ப்பதுங்கள் கணக்கு
குழு : தேசீயம் என்ற பேரில்
ஏய்ப்பதுங்கள் கணக்கு

பெண் : தமிழ்நாடு

குழு : தமிழருக்கே

பெண் : தமிழ்நாடு

குழு : தமிழருக்கே

பெண் : தமிழ்நாடு

குழு : தமிழருக்கே

குழு : ஆந்திர தேசம் ஆந்துருலுக்கே

பெண் : கிருஷ்ணதேவருடன் ராம ராய ரெமை
ஆண்ட தேசமெனும் ராமையா

குழு : ராமையா ராமையா

பெண் : கொறத்த தேசமெனும் பெயரில் நீங்களதை
சேர்த்து வைத்ததென பீமையா

குழு : பீமையா பீமையா

பெண் : ஆந்திரதேசமும் நாங்களும் ஒன்றாய்
வாழ்வதும் முறைதானோ

குழு : வாழ்வதும் முறைதானோ

பெண் : அடிப்போம் பறிப்போம் பறிப்போம்
எமக்கு வேண்டும் தெலுங்கானா…..

குழு : வேண்டும் தெலுங்கானா…..

குழு : ஆந்திரதேசமும் ஆந்தருக்கே…..(3)

இருவர் : மகாராஷ்டிரம் நமதே…….

பெண் : சிவாஜி ஆண்ட எம்மராட்டி
தேசத்தில் விரோதி வரலாமா

குழு : விரோதி வரலாமா

பெண் : விடாமல் துரத்து போராட்டம் நடத்து
எழுவோம் ஒரு சேனா

குழு : எழுவோம் ஒரு சேனா

பெண் : கட்டுப்பட்டு சுமந்தது போதும்

குழு : போதும்

பெண் : மட்டுப் பட்டு பயந்தது போதும்

குழு : போதும்

பெண் : மாறித் தட்டு வீரங்கொட்டு

குழு : வாழ்க போராட்டம்……

பெண் : பஞ்சாப்
குழு : நமதே……

பெண் : பஞ்ச நதிகள் ஒன்றாக ஓடும்
பாஞ்சால தேசமடி
பகைவரை எதிர்த்துப் பட்டாளம் சேர
அஞ்சாத தேசமடி

குழு : ………………………………

பெண் : சண்டிகார் என்னும் புதுநகர் எங்கள்
தலைநகர் ஆகுமடி
தரமாட்டோம் அதை விடமாட்டோம்

இருவர் : என துணிந்து சபதம் செய்யடி

பெண் : ஹரியும் சிவனும் என
பிரிந்து பிரிந்து நாம்
வாழ்வோம் ஹரியானா
அந்தத் தலைநகரம் எங்கள் தலைநகராம்

இருவர் : பஞ்சாப் பெறலாமா

இருவர் : வங்காளம் நமதே
கர்நாடகம் நமதே
கேரளம் நமதே
சுதந்திர காஷ்மீர் ஜிந்தாபாத்….

குழு : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம்

பெண் : இந்திய தேசத்து செல்வங்களே
இணையாதிருக்கும் உள்ளங்களே
சிந்திய ரத்தம் போதாதோ
தேசம் நாசம் ஆகாதோ
அங்கே தெலுங்கானா
அப்பப்பா இங்கே ஹரியானா
நடுவில் பல சேனா இங்கே
நடப்பது சரிதானா…..

குழு : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம்

பெண் : அடிமையாக வாழ்ந்த காலம்
மறந்து போனதா
அஞ்சி அஞ்சிக் கிடந்த காலம்
மறந்து போனதா
கொடுமை தீர்ந்து வாழ வந்தும்
ஒருமை இல்லையே
ஒரு குலத்தைப் போல வாழ்வதென்ற
பொறுமையில்லையே

பெண் : மாநிலங்கள் தோறும் என்ன பிரிவினை
நாம் மறந்து விட்டோம் அண்ணல் காந்தி ஒருவனை
ஒற்றுமை காண்போம் அதில் வெற்றியும் காண்போம்
குழு : ஒற்றுமை காண்போம் அதில் வெற்றியும் காண்போம்

பெண் : ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
நம்மிடம் ஒற்றுமை நீங்கினால்
அனைவர்க்கும் தாழ்வு
வந்தே மாதரம் என்போம்
நம் பாரதத் தாயை வணங்குவோம் என்போம்

குழு : வந்தே மாதரம் என்போம்
நம் பாரதத் தாயை வணங்குவோம் என்போம்
வந்தே மாதரம் என்போம்
நம் பாரதத் தாயை வணங்குவோம் என்போம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Badass" song lyrics from LEO: Click Here