Duraiye Ilamai Paaraai Song Lyrics is a track from Kathanayaki Tamil Film – 1955, Starring Padmini. T. R. Ramachandran, M. N. Rajam, K. A. Thangavelu and Others. This song was sung by A. M. Rajah and K. Jamuna Rani and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Kannadasan.

Singers : A. M. Rajah and K. Jamuna Rani

Music Director : G. Ramanathan

Lyricist : Kannadasan

Female : Duraiyae ilamai paaraai
Kathaigal kelaai inge vaaraai
Thaniyae nillaathae kannaa odivaa
Vegamaai odi vaa

Female : Duraiyae ilamai paaraai
Kathaigal kelaai inge vaaraai
Thaniyae nillaathae kannaa odivaa
Vegamaai odi vaa

Female : Isai paadum kangal meedhey
Ila nenjam kaattum maathae
Unnai thedi vanthaal ayya
Mei inbam kaana vaaraai

Female : Isai paadum kangal meedhey
Ila nenjam kaattum maathae
Isai paadum kangal meedhey
Ila nenjam kaattum maathae
Aa…aa…unnai thedi vanthaal ayya
Mei inbam kaana vaaraai
Unnai thedi vanthaal ayya
Mei inbam kaana vaaraai

Female : Kannalae pesi varum
Kaantha silai maanvizhi
Kadhal geedham paadum thaenmozhi
Kannalae pesi varum
Kaantha silai maanvizhi
Kadhal geedham paadum thaenmozhi

Female : Vaanavil varnang kaattum poongodiyai
Vanthu paar vanna therilae
Vaanavil varnang kaattum poongodiyai
Vanthu paar vanna therilae
Santhoshamae kondaadalaam
Thendral thaalaattum nal inba kaavilae

Female : Santhoshamae kondaadalaam
Thendral thaalaattum nal inba kaavilae
Santhoshamae kondaadalaam
Thendral thaalaattum nal inba kaavilae

Female : Kannalae pesi varum
Kaantha silai maanvizhi
Kadhal geedham paadum thaenmozhi

Female : Vinyaana kannottam pothumae
Meinyaana pennaalai paarumae
Ullaasa ennangal illaatha ullangal
Vaazhvil inbam kaanumo

Female : Vinyaana kannottam pothumae
Meinyaana pennaalai paarumae
Ullaasa ennangal illaatha ullangal
Vaazhvil inbam kaanumo

Male : Kavipaadum kangal meethe
Kalai nyaanam koorum maathae
Kavipaadum kangal meethe
Kalai nyaanam koorum maathae

Male : Aaa…aa….kanal maeni kandaen kannae
Mei kaadhal koora vaaraai
Kanal maeni kandaen kannae
Mei kaadhal koora vaaraai

Both : Thirunaal pudhumai kaanbom
Kadhaigal ketpom ondraai vaazhvom
Manamae kolvomae anbae
Thaazhvilaa vaazhvelaam kaanuvom..

பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் கே. ஜமுனாராணி

இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : துரையே இளமை பாராய்
கதைகள் கேளாய் இங்கே வாராய்
தனியே நில்லாதே கண்ணா ஓடிவா
வேகமாய் ஓடி வா…….

பெண் : துரையே இளமை பாராய்
கதைகள் கேளாய் இங்கே வாராய்
தனியே நில்லாதே கண்ணா ஓடிவா
வேகமாய் ஓடி வா…….

பெண் : இசை பாடும் கண்கள் மீதே
இள நெஞ்சம் காட்டும் மாதே
உன்னைத் தேடி வந்தாள் ஐயா
மெய் இன்பம் காண வாராய்…..

பெண் : இசை பாடும் கண்கள் மீதே
இள நெஞ்சம் காட்டும் மாதே
இசை பாடும் கண்கள் மீதே
இள நெஞ்சம் காட்டும் மாதே
ஆஅ…..ஆ…..உன்னைத் தேடி வந்தாள் ஐயா
மெய் இன்பம் காண வாராய்…..
உன்னைத் தேடி வந்தாள் ஐயா
மெய் இன்பம் காண வாராய்…..

பெண் : கண்ணாலே பேசி வரும்
காந்தச் சிலை மான்விழி
காதல் கீதம் பாடும் தேன்மொழி
கண்ணாலே பேசி வரும்
காந்தச் சிலை மான்விழி
காதல் கீதம் பாடும் தேன்மொழி

பெண் : வானவில் வர்ணங் காட்டும் பூங்கொடியை
வந்து பார் வண்ணத் தேரிலே…
வானவில் வர்ணங் காட்டும் பூங்கொடியை
வந்து பார் வண்ணத் தேரிலே…
சந்தோஷமே கொண்டாடலாம்
தென்றல் தாலாட்டும் நல் இன்பக் காவிலே……

பெண் : சந்தோஷமே கொண்டாடலாம்
தென்றல் தாலாட்டும் நல் இன்பக் காவிலே
சந்தோஷமே கொண்டாடலாம்
தென்றல் தாலாட்டும் நல் இன்பக் காவிலே……

பெண் : கண்ணாலே பேசி வரும்
காந்தச் சிலை மான்விழி
காதல் கீதம் பாடும் தேன்மொழி

பெண் : விஞ்ஞானக் கண்ணோட்டம் போதுமே
மெஞ்ஞானப் பெண்ணாளைப் பாருமே
உல்லாச எண்ணங்கள் இல்லாத உள்ளங்கள்
வாழ்வில் இன்பம் காணுமோ

பெண் : விஞ்ஞானக் கண்ணோட்டம் போதுமே
மெஞ்ஞானப் பெண்ணாளைப் பாருமே
உல்லாச எண்ணங்கள் இல்லாத உள்ளங்கள்
வாழ்வில் இன்பம் காணுமோ

ஆண் : கவிபாடும் கண்கள் மீதே
கலை ஞானம் கூறும் மாதே
கவிபாடும் கண்கள் மீதே
கலை ஞானம் கூறும் மாதே

ஆண் : ஆஅ…ஆ….கன்னல் மேனி கண்டேன் கண்ணே
மெய்க்காதல் கூற வாராய்
கன்னல் மேனி கண்டேன் கண்ணே
மெய்க்காதல் கூற வாராய்

இருவர் : திருநாள் புதுமை காண்போம்
கதைகள் கேட்போம் ஒன்றாய் வாழ்வோம்
மணமே கொள்வோமே அன்பே
தாழ்விலா வாழ்வெலாம் காணுவோம்……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Thalapathy Kacheri Song: Click Here